பேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்களுடன் தொல்காப்பியம் குறித்த நேர்காணல்…
VAYALVELI THIRAIKKALAM VAYALVELI THIRAIKKALAM
6.93K subscribers
13,553 views
316

 Published On Nov 19, 2017

மதுரையில் அமைந்துள்ள நான்காம் தமிழ்ச்சங்கத்தில் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களின் 151 ஆம் பிறந்தநாள் விழா 21.03.2017 காலையில் நடைபெற்றது. நிகழ்ச்சி நிறைவுற்றதும் இந்த விழாவுக்குச் சிறப்புரையாற்ற வந்திருந்த தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியனார் அவர்களிடம் தொல்காப்பியம் குறித்த அவர்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும்படி வேண்டினேன். என் வேண்டுகோளை அன்புடன் நிறைவேற்றினார்கள்.

பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியனார் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேராற்றலும், பெரும்புலமையும் பெற்றவர்கள். சங்க நூல்களை எழுத்தெண்ணிக் கற்றவர்கள். இணைசொல்ல முடியாத தமிழறிவுபெற்ற இப்பெருமகனாரின் ஆற்றொழுக்கான உரையினை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்கின்றேன். இந்த ஒளிப்பதிவு முயற்சிக்கு அருந்துணை செய்த மதுரை, நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலர் வழக்குரைஞர் ச. மாரியப்ப முரளி அவர்களுக்கும், பெரியார் பற்றாளர் திரு. பி. வரதராசன் அவர்களுக்கும், எங்களின் படப்பிடிப்புக்குழுவினருக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடையவன் ஆவேன். இந்தக் காணொளியைத் தாங்கள் கண்டு மகிழ்வதுடன் தங்கள் நண்பர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். அனைவரும் இணைந்து தொல்காப்பியம் பரப்புவோம்.

show more

Share/Embed