கண்ணை இழந்தாலும் ஜல்லிக்கட்டில் காதல் குறையாத மாடுபிடி வீரர் மணிரத்தினம் | Hello Madurai
Hello Madurai Hello Madurai
87.4K subscribers
80,600 views
2.6K

 Published On May 12, 2021

சண்டியரே, சண்டியேர கண்ணுபடப் போகுதுங்க என்ற பாடலைத்தான் காலர் ரிங் டோனாக வைத்துள்ளார் மதுரை முடக்கத்தான் மணிரத்தினம். ஆனால் தனது ஒரு கண்ணையே ஜல்லிக்கட்டிற்காக இழந்துள்ளார் என்பதை எண்ணும்போது நெஞ்சம் கலங்காமல் இல்லை.

உயிரையும் துச்சமென எண்ணி களத்தில் இறங்கி உயிரையும் விட்ட பல்வேறு மாடுபிடி வீரர்களுக்கு மத்தியில், தனது இடது கண்ணையே கொடுத்துள்ளார் மதுரை முடக்கத்தான் மணிரத்தினம் எனும் இளைஞர். இதுவெல்லாம் மிகச் சாதாரணம் என்று நம்மிடம் அவர் தெரிவித்தாலும், நம் மனதை கலங்க வைக்காமல் இல்லை.

எனக்கு எந்த குறையும் இல்ல, ஜல்லிக்கட்டில் இனிமேல் நான் மாடுபிடிக்க முடியாது என்பதுதான் தினம், தினம் என்னைக் கொல்கிறது. இதற்காக நான் மாவட்ட ஆட்சியர் முதல் பல்வேறு அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை. ஒத்த கண்ணுல மாடுபடிக்க கூடாதுனு என்ன ஒதுக்குறாங்க. அந்த கஷ்டம்தான் தாங்க முடியல என்கிறார் முடக்கத்தான் மணிரத்தினம்.

ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடக்கும்போதெல்லாம் அதில் எப்படியாவது கல்ந்து கொண்டு ஒரு மாட்டையாவது ஒற்றை கண்ணுடன் பிடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறும் அவர், தேசிய கொடியுடன் களத்தில் இறங்கக்கூடிய தேசியக் கொடி குட்டை மாட்டினை வளர்த்து வருகின்றார்.

கண்ணுல மட்டும் இல்லீங்க, விலா எலும்புல ஒருமுறை குத்துனதுல டாக்டர் இனி உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டாங்க. ஆனால், நான் மறுபடியும் உயிர் பிழைத்து வந்தேன். அதேபோல் தொடையில், முதுகில் என பல்வேறு குத்துப்பட்ட இடங்களை நம்மிடம் காண்பி்த்தார்.

ஜல்லிக்கட்டு மீதான இவரது காதல் கண்மூடித்தனமாக நமக்குத் தோன்றினாலும், தனது இடப்புறக் கண்ணை இதற்காக இழந்துள்ளார் எனும்போது, பல ஜல்லிக்கட்டு வீரர்களும் அதை எண்ணி வருந்துவதுடன், ஒரு களத்தில் இறக்கிவிடலாம் என்கின்றனர்.

எதிர் வரும் காலங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் மணிரத்தினத்தின் ஆசை நிறைவேறலாம். அப்படி நிகழ்ந்தால் நமக்கும் அதில் சந்தோஷம் நிச்சயம் உண்டு. கண்ணை இழந்த பிறகும் ஜல்லிக்கட்டு மீதான காதல் குறயைாத முடக்கத்தான் மணிரத்தினம் அவர்களின் எதிர்கால வாழ்வு சிறக்க வேண்டும் என்ற வாழ்த்துக்களுடன் நாம் அங்கிருந்து கிளம்பினோம். நீங்களும் அவரை வாழ்த்தலாம், களத்தில் இறங்கி விளையாட வழி செய்யலாம். அப்படி விளையாடும்போது நிச்சயமாக அவரது வலி நீங்கும்.


நன்றிகள் !!


முடக்கத்தான் மணிரத்தினம் தொடர்பு எண்: 79046 19699.


_________________________________________________________
இதுபோல் உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

💓 App Link: https://play.google.com/store/apps/de...

💓 Facebook :  / maduraivideo  

💓web site :www.hellomaduraitv.com

💓web site :www.hellomadurai.in

💓web site :www.tamilvivasayam.com

💓 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

show more

Share/Embed