போவோம் முஹம்மதை தேடி ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா |
Hajith Ibrahim Hajith Ibrahim
414K subscribers
3,054 views
49

 Published On Sep 26, 2024

போவோம் முஹம்மதை தேடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி
பூமான் நபிகளின் புண்ணியம் சேர்க்கும்
பொன்னான மதினா கண்ணியம் காக்கும்
கோமான் நபி தந்த ஈமான் எழில்மணக்க
போவோம் முஹம்மதை தேடி
#GOLDEN_VOICE
------------------------------------------------------------------------------------------------------------
இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய "போவோம் முஹம்மதை தேடி" என்ற பாடல்.
------------------------------------------------------------------------------------------------------------
LYRICS

பல்லவி
போவோம் முஹம்மதை தேடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி
பூமான் நபிகளின் புண்ணியம் சேர்க்கும்
பொன்னான மதினா கண்ணியம் காக்கும்
கோமான் நபி தந்த ஈமான் எழில்மணக்க
போவோம் முஹம்மதை தேடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி

சரணம் 1
அலைகள் பாடும் கடல்களைத் தாண்டி
அரேபியா மண்ணும் அஹமதாய் மின்னும்
பேரீத்த மரங்களும் பெருமான் புகழைப் பாடும்
போவோம் முஹம்மதை தேடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி

சரணம் 2
கலிமா வாழும் கலைமணம் சூழும்
மலைகள் மகிழும் மாநிலம் புகழும்
மறைமணம் வீசும் மாநபி அருளைக்காண
போவோம் முஹம்மதை தேடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி

சரணம் 3
உகதின் பாங்கும் உன்னதம் தாங்கும்
அஹதின் அருளும் ஆன்மீகம் ஓங்கும்
இஹ்லாஸ் இலங்கும் எம்மான் நபியைக்காண
போவோம் முஹம்மதை தேடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி

சரணம் 4
வானவர் மகிழும் வையமே சூழும்
மானுடம் புகழும் மாண்புகள் மலரும்
மஹ்ஷரில் பார்த்திடும் மன்னர் நபியைக் காண
போவோம் முஹம்மதை தேடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி

சரணம் 5
கஸ்தூரி வாசம் கனிவோடு வீசும்
காத்தமுன் நபிகள் நேர்த்திகள் பேசும்
மஸ்ஜிது நபவியின் மன்னர் தர்பாரைக் காண
போவோம் முஹம்மதை தேடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி

சரணம் 6
சாந்தமே தவழும் சற்குணம் வாழும்
சரித்திரம் புகழும் சம்பூர்ணம் ஆகும்
சர்தார் நபிகளின் அரிதான அருள் காண
போவோம் முஹம்மதை தேடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி

போவோம் முஹம்மதை தேடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி
போவோம் முஹம்மதை தேடி எந்நாளும்
போவோம்... போவோம் முஹம்மதை நாடி
போவோம்... போவோம் முஹம்மதை தேடி.
***************************************************************************

show more

Share/Embed