MANGALYA STHAVAM
Padmanaban K P Padmanaban K P
10K subscribers
116,184 views
355

 Published On Dec 2, 2013

மாங்கள்ய ஸ்தவம்
Mangalya Sthavam
from Vishnu Dharmottara Puranam

தால்ப்ய ரிஷி கேட்கிறார்
சுபகாரியங்களை ஆரம்பிக்கும் போது எதனை ஜபிக்க வேண்டும்
துவங்கிய காரியங்கள் இனிது நிறைவேற எதனை ஜபிக்க வேண்டும்
கெட்ட கனவுகள் பலனற்றுப் போக எதனை ஜபிக்க வேண்டும்
யாம் காணும் அசுபங்களுக்கு பரிகாரம் காண எதனால் முடியும்

புலஸ்த்ய ரிஷி பதில் சொல்கிறார்

எது உமக்கு சுபமோ
எது வேண்டிய பலன் யாவும்
கைகூடும்படி செய்ய வல்லதோ
எது தீவினை யாவற்றையும்
ஒழிக்க வல்லதோ
அத்தகைய துதியை
உமக்கு சொல்கிறேன்

பிறவியை நீக்க வல்லவன்
உலகில் உள்ள பொருள்
எல்லாவற்றிற்கும்
சொந்தக்காரன்
உலகிலேயே மிக உயர்ந்தவன்
அந்தத் திருமால் ஆகிய எம்பெருமான்
ஸ்ரீஹரியைத் தியானித்திடும் மனிதன்
தீயனவெல்லாம் போக்கி
தான் விரும்பும் எல்லாச் செயல்களையும்
தனக்கு நற்பலன் அளிக்கும்படி
சாதித்துக் கொள்கிறான்
அந்த ஸ்துதியே
மாங்கள்ய ஸ்தவம்
அந்தத் திருமாலை
வராஹ அவதாரம் எடுத்தவனே
எனக்கு மங்களங்கள் பொங்க அருள வேண்டும்
அந்தத் திருமாலை
நரஸிம்ஹ அவதாரம் எடுத்தவனே எனக்கு மங்களங்கள் பொங்க அருள வேண்டும்
அந்தத் திருமாலை
வாமன அவதாரம் எடுத்தவனே எனக்கு மங்களங்கள் பொங்க
அருள வேண்டும்
அந்தத் திருமாலை
மத்ஸ்ய அவதாரம் எடுத்தவனே எனக்கு மங்களங்கள் பொங்க
அருள வேண்டும்
அந்தத் திருமாலை
பரசுராம அவதாரம் எடுத்தவனே எனக்கு மங்களங்கள் பொங்க
அருள வேண்டும்
அந்தத் திருமாலை
இராம அவதாரம் எடுத்தவனே எனக்கு மங்களங்கள் பொங்க
அருள வேண்டும்
அந்தத் திருமாலை
கிருஷ்ண அவதாரம் எடுத்தவனே எனக்கு மங்களங்கள் பொங்க அருள வேண்டும்
என்று ஒருவன் துதித்தால்
அவனது
தீமைகள் யாவும் அழிந்து போகின்றன
கொடிய கிரகங்களின்
தீய பலன்களும் மாறுகின்றன
தொழில்களும் நற்பயன் அளிக்கின்றன
தீய கனவும்
பயனற்றதாகின்றது
நல்வினையின் உயர்ந்த பலனையும்
பெறுகின்றான்
என பலச்ருதி
சொல்கிறது
மாங்கள்ய ஸ்தவத்தால் துதிக்கப் பெற்ற திருமால்
எல்லா மங்களங்களையும்
நல்குகிறான்
எல்லா வடிவத்திலும்
தோன்றி
குறைவற்றஆற்றல் படைத்த அந்தப் பரமன்
அடியார்க்கு
நற்பாதுகாப்பையும்
அளிக்கிறான்
என
ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தர புராணத்தில் உள்ள
மாங்கள்ய ஸ்தவம் சொல்கிறது

Sri Sunder Kidambi Swami
www,prapatti.com

show more

Share/Embed