லலிதா சஹஸ்ரநாமத்தில் இருந்து பிரச்சனை தீர, குடும்ப ஒற்றுமைக்கு, காரியம் நிறைவேற 3 முக்கிய நாமங்கள்
nam azhagiya aanmeegam nam azhagiya aanmeegam
41K subscribers
8,578 views
161

 Published On Premiered Aug 18, 2023

#lalitha #lalithasahasranamam #lalithadevi #friday

கலியுக பொக்கிஷமான‌ ஸ்ரீ ஸஹஸ்ரநாமத்தினை தொகுத்தவர்கள் வசின்யாதி வாக்தேவியர்கள் ( வசின்யாதி வாக்தேவதா ரிஷய: )
இந்த ஸஹஸ்ரநாமத்தை தொகுக்கும்‌படி வாக்தேவியர்க்கு லலிதா உத்தரவிடுகிறாள்..
அவள் உத்தரவுப்படியே லலிதாவின் மஹிமையை சொல்லும் ஆயிரத்தெட்டு நாமங்களையும் வாக்தேவியர் தொகுக்க முனைந்தனர்.
அப்படி தொகுக்கும் போது முதல் நாமமாக எதை சொல்வது என்று யோசித்தனர்..
அப்போது யோசித்த வாக்தேவியர் குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான பாசப்பிணைப்பை பற்றி சிந்திக்கின்றனர்.
உயிரோடு பிணைந்த பாசம் தாய்ப் பாசம் ஒன்று தான்..
நாம் பிறந்த பின் நமக்கு பிறர் உறவாகின்றனர்.. ஆனால் அம்மா நாம் கர்ப்பத்தில் இருப்பதிலிருந்தே உறவாகிறாள்..
பிறந்த குழந்தைக்கு கூட தன்‌ அன்னையின் அரவணைப்பிற்கும் பிறரின் கைக்கும் வித்யாசம் தெரிகிறது..
அவள் தான் உலக பந்தங்களை நமக்கு சொல்லி தருகிறாள்.
நாம் சுயநினைவில் இருக்கும் போதும் நம்மை அறியாமல் கீழே விழும்போது தும்மும் போது கூட சொல்வது அம்மா என்றுதான்..
இந்தளவு மகிமை பெற்றது தாய்ப்பாசம்..
இதை சிறப்பு செய்ய‌ நினைத்த வாக்தேவியர் முதல் நாமமாக மாதா என வைக்க முயன்றனர்..
ஆனால் பூலோக தாய்மார்களையும் நாம் மாதா என்றே சொல்கிறோம்..‌
லலிதாவோ ஶகல லோகத்திற்கும் தாயாவாளே.. ?!!
ஆக இவள் ஶாதாரண தாயல்ல.. மேன்மையான தாய்.. ஆதலால் ஸ்ரீ மாதா எனும்‌ நாமமே முதல் நாமமாக வந்தது..
ஓம்‌ ஸ்ரீ மாத்ரே நம:
பொன் பொருள் ஆடம்பரம் அலங்காரம் என எதற்கும் ஆசைப்படாதவள் ( நிஷ்காமா )
எதன் மீதும் ஆசையற்றவளாதலால் லலிதா அவ்யாஜ கருணாமூர்த்தி யாக விளங்குகிறாள்.. (எதையுமே எதிர்ப்பார்க்காமல் கருணை‌புரிபவள்)
பற்றற்றவளாய் , எதிர்ப்பார்ப்பே இல்லவாதவளாய் இருக்கும் லலிதா பக்தி என்னும் ஒன்றுக்கு மட்டுமே வசப்படுகிறாள்
அப்படி லலிதாவுக்கு ப்ரீதமானதாக ஸ்ரீ ஸஹஸ்ரநாமம் முதலில் சொல்வது பக்திப்ரியா என்பது தான்..
ஆம் அவள் நம்மிடம் விரும்புவது நம் பக்தியை மட்டுமே...
பக்தியால் மட்டுமே அவளை அடைய‌முடியும்.. ( *பக்திகம்யா*) Bhakti Kamya
பக்திக்கு மட்டுமே லலிதா வசப்படுகிறாள்‌‌‌ ( *பக்திவச்யா*)
பக்தி பண்ணும் பக்தர்களின் மனதையே லலிதா பீடமாக கொண்டு அங்கே பெண் அன்னப்பறவையாக அமர்ந்து விடுகிறாள்.. ( பக்தமானஸஹம்ஸிகா ) [லலிதா அமரும் பீடங்களில் முதலாவதாக சொல்லப்படுவது பக்தர்களின் மனம்தான்)
தேவர்களின் பிரச்சனையை தீர்த்து அனுக்ரஹிக்க வந்ததால் லலிதா தேவகார்யசமுத்யதா/Deva karya samudhyatha என அழைக்கப்படுகிறாள்*
சொல்ல வேண்டிய முறை :- வீட்டில் அம்பாள் படம் அல்லது விக்ரஹம் முன் அல்லது ஆலயத்தில் அமர்ந்து “ஓம் தேவகார்யசமுத்யதாயை நம:” என 27/54/108 முறை த்யானம் செய்ய வேண்டும்..
நமக்குக்கிடைக்கும் பலன்கள் :- தேவர்களின் துயர்துடைத்த ஜகன்மாதாvana annai lalithambigai தன் நாமம் சொல்லும் பக்தர்களின் பிரச்சனைகளை உடனடியாக போக்கி அருளுவாள்

குடும்ப ஒற்றுமைக்கு சொல்ல வேண்டிய நாமம்
*ஓம் ஸ்வாதீனவல்லபாயை நம:*/Om swadheena vallabhaya yai nama

வேண்டும் அனைத்தும் நிறைவேற சொல்ல வேண்டிய நாமம்*
ஓம் காமாக்ஷ்யை நம: (Ohm Kamakshyai namaha)
விருப்பத்தை நிறைவேற்றித்தரும் கண்களை கொண்டதால் காமாக்ஷீ என அழைக்கப்படுகிறாள். அவள் அமர்ந்த பீடம் காமகோடி பீடம் எனப்படும்..

அம்பாளின் நெற்றி அஷ்டமி நிலவை போல சரியான அரைவட்டமானது.. ஒளி பொருந்தியது..
*அஷ்டமீ சந்தர-விப்ராஜ தளிக-ஸ்தல சோபிதா
Ashtami-chandra-vibraja-dhalika-sthala-shobhita

அஷ்டமீ சந்த்ரனை போன்ற முகத்திலே களங்கமாக கஸ்தூரி திலகத்தை கொண்டிருப்பவள் லலிதா...
*முகச்சந்த்ர களங்காப ம்ருகணாபி விசேஷகா
मुकचंद्र-कलंकaभ-मृगनaभि-विषेशका

லலிதா தன் பக்தர்களுக்கு ஶகல சௌபாக்யங்களையும் அள்ளி வழங்குகிறாள் (பக்தசௌபாக்யதாயினி) Bhakta-sowbhagya-dayini

லலிதா தன் கடைக்கண்ணால் பிறப்பிக்கும் உத்தரவிற்காக கோடி லட்சுமிகள் காத்திருக்கின்றார்கள்..
அவள் தன் கடைக்கண் அசைவாலே எந்த பக்தருக்கு அருள் பண்ண வேண்டும் என உத்தரவிடுகிறாளோ அவர்களுக்கு ஶகல நலன்களையும் வழங்க லட்சுமி தேவியர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்..
இதனால் லலிதா கடாக்ஷகிங்கரீபூத கமலாகோடி ஸேவிதா Kataksha kimkari bhootha kamala koti sevithaஎன அழைக்கப்படுகிறாள்

show more

Share/Embed