ஊழியர்களை குறை சொல்லும் விசயத்தில் உன் பேரில் எனக்கு குறை உண்டு
Theos Gospel Hall Theos Gospel Hall
135K subscribers
44,503 views
1.3K

 Published On Jul 24, 2020

கள்ள ஊழியர்களின் தவறுகளை நாம் சுட்டிக் காண்பிக்கலாமா கூடாதா?

இதை குறித்து கர்த்தர் நேரிடையாக சொன்ன வசனம் எங்கே உள்ளது?

சாலமன் திருப்பூர்
Theos Gospel Hall Ministry


இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்

1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

எங்கள் நம்பிக்கை

1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது

2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.

4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.

5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.

6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டர்கள் இருக்கலாம்.

7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.

8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்

9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.

10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்

show more

Share/Embed