ஆட்சேபனை மனு|| உங்களுடைய நிலத்தை எதிராளி பட்டா போடுவதை நிறுத்துவது எப்படி?||Common Man||
Common Man Common Man
238K subscribers
4,398 views
159

 Published On Aug 25, 2022

#பாட்டாவை #தடுக்க #ஆட்சேபனை #மனு

உங்களுடைய எதிரியின் பட்டா மாற்றத்திற்கு ஆட்சேபனை மனு கொடுக்க தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்.
1) உங்களுடைய சொத்தை ஆக்கிரமித்து கைபற்ற முயலுபவர்கள் அல்லது அத்து மீறி நுழைய முயலுபவர்கள் உங்களுடைய சொத்தை எப்படியாவது வில்லங்கம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உங்கள் சொத்திற்கு உரிமை அற்ற நபர் மூலம் கிரய பத்திரம் உருவாக்கி அந்த ஆவணத்தை வைத்து உங்கள் மீது வழக்கு தொடுக்க நினைக்கலாம் உங்களுடைய சொத்தின் உரிமைக்கு சாமபேத தான தண்ட முறையில் தொடர்ந்து குந்தகம் விளை விக்க நினைப்பவர்களை எதிரி என்று நான் குறிப்பிடுகிறேன்.
2) அந்த எதிரி என்ற வார்த்தையை இந்த கட்டுரையில் தொடர்ந்து பயன்படுத்த நான் விரும்பாததால் எதிர்மனுதாரர் என்றே குறிப்பிடுகிறேன். உங்களுடைய எதிர்மனுதாரர் உரிமையற்ற ஆவணங்கள் மூலமாக தன் பெயருக்கு பட்டா மாற்ற ஆன்லைனில் மனு செய்கிறார்! அது உங்களுக்கு தெரிய வருகிறது என்றால்
3) உங்கள் தரப்பு ஆவணங்களையும் ஒரு ஆட்சேபனை கடிதத்தையும் இணைத்து பதிவு தபாலில் வட்டாட்சியர், வருவாய் அலுவலர், கிராமநிர்வாக அதிகாரிக்கு என மூவருக்கும் ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவு தபாலில் அனுப்பிட வேண்டும்.
4) அந்த ஆட்சேபனை கடிதம் கொடுத்தவுடன் இருதரப்பையும் அழைத்து விசாரித்து விஏஓ அறிக்கை தயாரித்து பட்டா கொடுக்கலாம் (அ) கொடுக்க கூடாது என்ற முடிவினை எடுப்பார்கள். எடுத்த முடிவினை தங்களுக்கு தெரியபடுத்துவார்கள்.
5) ஒரு வேளை சார் நான் என்ன பெட்டிசன் கொடுத்தாலும் கூப்பிட்டு விசாரிக்கவே மாட்டார்கள். தாசில்தார் எதிர்மனுதாரருக்கு ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் என்று உணர்ந்தால் தாசில்தார் கொடுத்த பட்டா மாறுதல் அல்லது பட்டா வழங்குதல் உத்தரவை எதிர்த்து நீங்கள் கோட்டாட்சியருக்கும் மாவட்ட வருவாய் அலுவலருக்கும் மனு செய்தல் வேண்டும்.
6) கோட்டாட்சியருக்கும் மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு அனுப்பிஇருந்தமனுவின்ஒப்புகைசீட்டுடன்அனைத்துவிதமானஆட்சேபனைகடிதங்களையும்இணைத்துவட்டாட்சியர்உங்கள்எதிர்மனுதாரருக்குகொடுத்தபட்டாமாறுதல்உத்தரவுகளைஇணைத்துசீராய்வுமனுசெய்துமுடித்தல் வேண்டும்.
7) இந்த சீராய்வு மனுவும் உங்கள் எதிர் மனுதாரருக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் சீராய்வு மனு விசாரணையில் இருக்கும் போதே ஏதாவது ஒரு காரணம் உருவாக்கி சிவில் நீதி மன்றத்தில் பட்டா மாறுதலை நிறுத்த கோரியோ அல்லது உரிமை கோரியோ வழக்கு தொடர்ந்து விடுங்கள்.
😎 அதன் பிறகு நீதி மன்றத்தில் வழக்கு இருக்கிறது அங்கேயே நீங்கள் பரிகாரம் தேடி கொள்ளுங்கள் என்று வருவாய் துறையினர் அந்த பட்டா மாறுதல் மீது எந்த முடிவும் எடுக்காமல் விட்டு விடுவார்கள். நீங்கள் அந்தகால இடைவெளியை உங்கள் எதிர்மனுதாரருக்கு எதிராக பயன்படுத்தி கொள்ள முயற்சி செய்யுங்கள்.
9) வருவாய் துறை விஷயங்களில் முடிந்த அளவுக்கு பொறுமையும் நிதானமும் இருக்க வேண்டும். அனைத்து விஷயங்களையும் எழுத்து பூர்வமான மனுக்கள் மற்றும் கடிதங்களில் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். விடாமுயற்சி, அசராதநம்பிக்கை, கொஞ்சம் துணிவு இதெல்லாம் இருந்தால் உங்கள் எதிர்மனுதாரர் எவ்வளவு பெரிய செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும் நீங்கள் அவரை கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டலாம்.
10) ஒன்று மட்டும் உறுதியாக நினைத்து கொள்ளுங்கள் நடப்பது யாருடைய ஆட்சி என்றெல்லாம் நினைக்காமல் எதிர்மனுதாரர் மேற்படி கட்சிகளின் செல்வாக்கு எல்லாம் பயன்படுத்துகிறார் என்று நினைக்காமல் நடப்பது இந்திய சட்டத்தின் ஆட்சி என்று உறுதியாய் நம்புங்கள்.

show more

Share/Embed