ஜக மாயை - திருப்புகழ் | Jagaha Mayai - Thiruppugazh | Nithysaree Mahadevan
Amutham Music Amutham Music
355K subscribers
797,481 views
4K

 Published On Premiered Aug 3, 2020

Jagaha Mayai - Thiruppugazh | Singer : Nithyasree Mahadevan | Rendered by:
Arunagirinathar | Music : Rajkumar Bharathi | Tamil Devotional Song | Amutham Music

ஜக மாயை - திருப்புகழ் | குரலிசை : நித்யஸ்ரீ மஹாதேவன் | அருளியவர் : அருணகிரிநாதர் | இசை : ராஜ்குமார் பாரதி | தமிழ் பக்தி பாடல் | அமுதம் மியூசிக்

பாடல் வரிகள் :

முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கும்
இடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்

அடியார்க்கு நல்ல பெருமாள்
அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள்

அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள்
அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள்

அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள்
திரு நாமம் புகல்பவரே

நாளென் செயும்வினை தானென் செயும்
எனை நாடிவந்த கோளென் செயும்

நாளென் செயும்வினை தானென் செயும் எனை நாடிவந்த
கோளென் செயும் கொடுங் கூற்றென் செயும்

குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும்
சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே

ஜகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறி

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே

தனியேர கத்தின் முருகோனே
சமர்வேலெ டுத்த பெருமாளே

அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் . இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் ,தாயார் பெயர் முத்தம்மை . இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார்.
தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார்.
அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது.
அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன, மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளன.
முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் " தேவாரத்திற்கு” இணையாகவும், "கந்தர் அலங்காரம்“ திருவாசகத்திற்கு இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.

For Download & Streaming (itunes) :https://itunes.apple.com/in/album/thi...
Google Play Store: https://play.google.com/store/music/a...
Spotyfy : https://open.spotify.com/album/3YZiJp...
Napster :https://us.napster.com/artist/nithyas...
Amazon Prime :https://music.amazon.in/albums/B00584...
JioSavan : https://www.jiosaavn.com/album/thirup...
Wynk Music :https://wynk.in/music/album/sri-arvin...

#Amuthammusic#Nithyashreemahadevan#thiruppugazh
For More Videos:    / amuthammusic  
   / amuthammusicsanskritseries  
Follow us on:   / amuthammusicofficial  

show more

Share/Embed