Part-1 - கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986
Siva Siva Siva Siva
21.2K subscribers
248,530 views
2.1K

 Published On Dec 21, 2016

கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986
------
இப்பகுதியில் இடம் பெறும் சில பாடல்கள்:
00:25
கந்தர் அலங்காரம் - 106 (https://kaumaram.com/alangkaram/alang... )
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை ஒழித்தரு ளாய்ஒரு கோடிமுத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயில் ஏறிய மாணிக்கமே.

00:39
கந்தர் அலங்காரம் - 107 (https://kaumaram.com/alangkaram/alang... )
சூலம் பிடித்தெம பாசம் சுழற்றித் தொடர்ந்துவரும்
காலன் தனக்கொரு காலும்அஞ் சேன்கடல் மீதெழுந்த
ஆலம் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே.

திருமுருகாற்றுப்படை - தனி வெண்பாக்கள் (https://kaumaram.com/tmpadai/ )
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்திவாழ் வே.

01:28
( https://www.kaumaram.com/thiru/nnt000... )
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
.. .. கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
.. கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
.. .. கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
.. .. மற்பொரு திரள்புய ...... மதயானை
.. மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
.. .. மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
.. .. முற்பட எழுதிய ...... முதல்வோனே
.. முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
.. .. அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
.. .. அப்புன மதனிடை ...... இபமாகி
.. அக்குற மகளுட னச்சிறு முருகனை
.. .. அக்கண மணமருள் ...... பெருமாளே.

03:00
( https://www.kaumaram.com/thiru/nnt005... )
கொம்பனை யார்காது மோதிரு .. கண்களி லாமோத சீதள
.. .. குங்கும பாடீர பூஷண ...... நகமேவு
.. கொங்கையி னீராவி மேல்வளர் .. செங்கழு நீர்மாலை சூடிய
.. .. கொண்டையி லாதார சோபையில் ...... மருளாதே
உம்பர்கள் ஸ்வாமிந மோநம .. எம்பெரு மானேந மோநம
.. .. ஒண்டொடி மோகாந மோநம ...... எனநாளும்
.. உன்புக ழேபாடி நானினி .. அன்புட னாசார பூசைசெய்
.. .. துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே
பம்பர மேபோல ஆடிய .. சங்கரி வேதாள நாயகி
.. .. பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி
.. பங்கமி லாநீலி மோடிப .. யங்கரி மாகாளி யோகினி
.. .. பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண்
டெம்புதல் வாவாழி வாழியெ .. னும்படி வீறான வேல்தர
.. .. என்றுமு ளானேம நோகர ...... வயலூரா
.. இன்சொல்வி சாகாக்ரு பாகர .. செந்திலில் வாழ்வாகி யேயடி
.. .. யென்றனை யீடேற வாழ்வருள் ...... பெருமாளே.

41:00
( https://kaumaram.com/thiru/nnt0824_u.... )
திருப்புகழ் - ஒருவழிபடாது - (சோமநாதன்மடம்)
ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
முழலுமநு ராக மோக ...... அநுபோகம்
உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத
வுளமுநெகிழ் வாகு மாறு ...... அடியேனுக்

கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர
மெனமொழியும் வீசு பாச ...... கனகோப
எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
யெனதுபகை தீர நீயும் ...... அருள்வாயே

அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை
அடைவுதவ றாது பேணும் ...... அறிவாளன்
அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்
அவனிபுகழ் சோமநாதன் ...... மடமேவும்

முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ
முகரசல ராசி வேக ...... முனிவோனே
மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு
முனியஅறி யாத தேவர் ...... பெருமாளே.
------

show more

Share/Embed