சக்தி வாய்ந்த கந்தர் அநுபூதி பாடல் வரிகளுடன் - அருணகிரி நாதர்
Sai Priyam Sai Priyam
16K subscribers
774,232 views
7.6K

 Published On Jun 20, 2023

கந்தர் அனுபூதி என்னும் நூல் அருணகிரிநாதர் என்பவரால் பாடப்பட்டது. அருணகிரிநாதர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.

அனுபூதி என்னும் சொல்லினை அனு + பூதி என்று பிரிக்கலாம்
“அனு” என்பது அனுபவம். “பூதி” என்பது புத்தி. இது (அறிவு). அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி.

இந்த நூலில் 51 பாடல்கள் உள்ளன.
பாடல்கள் எதுகைத்தொடை ஓட்டத்தால் சந்தச்சுவை உடையனவாக உள்ளன.

பத்தாம் திருமுறை திருமந்திரம் நூலுக்கு ஒப்பாக இந்த நூல் கொள்ளத்தக்கது எனச் சமயவாணர்கள் கூறுகின்றனர்.

திருமூலர் இடையன் உடலுக்குள் புகுந்து திருமந்திரம் சொன்னாராம். அதுபோல அருணகிரிநாதர் கிளி உடலுக்குள் இருந்துகொண்டு இந்த நூலைச் சொன்னார் எனக் கூறுவர்.

கந்தர் அநுபூதியின் பலன்:

✨வறுமையில் வாடிய முருகனடியார் ஒருவர் தினமும், அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியை பாராயணம் செய்து வந்தார். இருந்தாலும் வறுமை நீங்கவில்லையே என வருந்தினார். செல்வ வளம் பெற, லட்சுமி குறித்த வேறு நூலை பாராயணம் செய்ய வேண்டுமோ? என்ற சந்தேகம் எழுந்தது. அதை தீர்க்க விரும்பிய அடியவர், காஞ்சிபுரம் புறப்பட்டார். பரமாச்சாரியாரை தரிசித்தார்.

✨''சுவாமி.... எனக்கு இப்போது, முதல் தேவை பணம் தான். கடன் சுமையால் கஷ்டப்படுகிறேன். வட்டி கட்டமுடியவில்லை. கந்தர் அனுபூதி பாராயணம், வறுமை போக்கும் என எனக்கு தோன்றவில்லை. லட்சுமி கடாட்சம் பெற ஏதேனும் ஸ்லோகம் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்'' என்றார்.

✨பரமாச்சாரியார் அவரிடம், ''முன்ஜென்ம வினைப்பயன் நீங்கும் வரை நம்பிக்கையுடன் பாராயணம் செய்ய வேண்டும். அதன் பின் பலன் கிடைக்கும். இன்னின்ன பலன் பெற இன்னின்ன பாராயணம் என்று அதில் இருக்கிறது. கந்தர் அனுபூதி நிச்சயம் செல்வ வளம் தரும்” என்றார்.

✨“கந்தர் அனுபூதியில் இதற்கு சான்று இருக்கிறதா சுவாமி?” என்றார் முருகனடியார்.

✨சுவாமிகள் புன்முறுவலுடன், ''வெளியில் ஏன் தேட வேண்டும். பாட்டுக்குள்ளே சான்று இருக்கிறதே? கந்தர் அனுபூதியின் கடைசி அடியைச் சொல்லேன் பார்க்கலாம்'' என்றார்.

✨அடியவர் கடைசி அடியை ராகத்துடன் 'குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்றார்.
“அதற்கு என்ன பொருள்?”

✨'குருவாய் வந்து அருள்புரிவாய் குகனே என்று பொருள்' பரமாச்சாரியார் சிரித்தபடி விளக்க ஆரம்பித்தார். ''வருவாய் அருள்வாய் என்றால் 'வா, வந்து அருள்புரிய வேண்டும்' என்பது ஒரு பொருள். இது தவிர, 'வருவாய் தா' என்றும் ஒரு பொருள் உண்டு இல்லையா? கந்தர் அனுபூதி பாராயணம் செய்தால் 'வருவாய் பெருகும்' என்பதில் இன்னுமா சந்தேகம்?

✨வேறு ஸ்லோகம் தேவையில்லை. கந்தர் அனுபூதியை தொடர்ந்து பாராயணம் செய்ய செல்வ வளம் பெருகும் என்றார் பரமாச்சாரியார்.

✨நன்றியுடன் விடைபெற்ற அடியவருக்கு கந்தரனுபூதியின் மகிமை புரிந்தது

Benefits of hearing Kandhar Anuboothi:-

✨An impoverished Murugandiyar used to recite Arunagirinath's Gandhar Anubhuti every day. However, he lamented that poverty did not go away. Do you need to recite another book on Lakshmi to get wealth? The doubt arose. The servant who wanted to solve it left for Kanchipuram. Visited Paramacharya.

✨Swami... Now my first need is money. I am suffering from debt burden. Unable to pay interest. Gandhar Anubhuti Parayanam, I do not think poverty will go away. If there is any slokam to get Lakshmi Kataksha, please suggest it.''

✨Paramacharya said to him, “One should recite with faith until the past life is gone. After that you will get benefit. It says what is the recitation to get what is the result. Kandar Anubhuti will surely bring wealth and prosperity.
"Swami, is there any proof of this in Kandhar Anubhuti?" Murugandiar said.

✨The Swami smiled and said, “Why search outside. Is there proof in the song? Let's see the last step of Kandar Anuphuti.''

✨ Adiyavar said the last step with the raga 'Guruvai rajva arulvai kugane'.
"What does that mean?"

✨Paramacharya started explaining with a smile which means Guruvai Arulpurivai Kugane. "Varuvai Arulvai" means 'come, come and bless'.

Apart from this, there is also a meaning of 'revenue tha' or not? Do you still have any doubt that reciting Kandar Anubhuti will increase your income? No need for another sloka.

✨ Paramacharya said that if you recite Gandar Anubhuti continuously, wealth will increase. Grateful farewell, the servant realized the glory of Gandhar anubhuti.

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

show more

Share/Embed