சகல கலைகளும் அருளும் சகலகலாவல்லி மாலை | Sakalakalavalli Maalai with Lyrics | Vijay Musicals
Vijay Musical Vijay Musical
1.6M subscribers
1,429,506 views
8K

 Published On Oct 25, 2020

Song : Sakalakalavalli Maalai - Lyrical Video
Singers : Trivandrum Sisters
Music : Sivapuranam D V Ramani
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals

பாடல் : சகலகலாவல்லி மாலை - பாடல் வரிகள்
குரலிசை : திருவனந்தபுரம் சகோதரிகள்
இசை : சிவபுராணம் D V ரமணி
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

சகலகலாவல்லி மாலை பாடல் வரிகள்
--------------------------------------------------------------------------
வெண்தா மரைக்குஅன்றி நின்பதம்
தாங்கஎன் வெள்ளைஉள்ளத்
தண்தா மரைக்குத் தகாதுகொ
லோசகம் ஏழும்அளித்து

உண்டான் உறங்க ஒழித்தான்பித்
தாகஉண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!

நான்முகன் நாயகியே
ஆயகலைகள் அருள்பவளே
நாவினில் அமர்ந்தவளே
நான்கு வேதங்கள் ஆனவளே

தாமரை நாயகியே
அறிவுத் தாகம் தீர்ப்பவளே
ஏட்டிலும் பாட்டிலுமே தாயே
வாழ்ந்து வருபவளே

நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்
வாய்பங்க யாசனத்தில்

கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றும்ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே
சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது
ஆர்ந்துஉன் அருள்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ
லோஉளம் கொண்டுதெள்ளித்

தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே
சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த
கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்துஅருள்
வாய்வட நூல்கடலும்

தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர்செந் நாவில்நின்று
காக்கும் கருணைக் கடலே
சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!

பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற்
பாதபங் கேருகம்என்
நெஞ்சத் தடத்துஅல ராததுஎன்
னேநெடுந் தாள்கமலத்து

அஞ்சத் துவசம் உயர்த்தோன்செந்
நாவும் அகமும்வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய்
சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!

பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொல் பனுவலும்யான்
எண்ணும் பொழுதுஎளிது எய்தநல்
காய்எழு தாமறையும்

விண்ணும் புவியும் புனலும்
கனலும்வெங் காலும்அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!

பாட்டும் பொருளும் பொருளால்
பொருந்தும் பயனும்என்பால்
கூட்டும் படிநின் கடைக்கண்நல்
காய்உளம் கொண்டுதொண்டர்

தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப்
பேடே சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!

சொல்விற் பனமும் அவதான
மும்கவி சொல்லவல்ல
நல்வித்தை யும்தந்து அடிமைகொள்
வாய்நளின ஆசனம்சேர்

செல்விக்கு அரிதுஎன்று ஒருகால
மும்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே
சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!

சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ்
ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார்நிலம் தோய்புழைக்கை

நற்குஞ் சரத்தின் பிடியோடு
அரசன்னம் நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே
சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!

மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும்என்
பண்கண்ட அளவில் பணியச்செய்
வாய்படைப் போன்முதலாம்

விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண்
டேனும் விளம்பில்உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ
சகல கலாவல்லியே!
சகல கலாவல்லியே!

show more

Share/Embed