மூகபஞ்சசதி சொல்ல ஓடிவந்து நம்மைக் காப்பாள் காமாட்சி!  மஹாபெரியவா mookapanchasathi glories periyava
nam azhagiya aanmeegam nam azhagiya aanmeegam
40.9K subscribers
68,841 views
1K

 Published On Feb 8, 2023

#mookapanchasathi #mahaperiyava #mookar #kalidasa #மூகபஞ்சசதி #மஹாபெரியவா

மூகபஞ்சசதி சொல்ல ஓடிவந்து நம்மைக் காப்பாள் காமாட்சி

ஞானத்தைக் கொடுக்கக்கூடிய
திருமண பாக்கியத்தை தரக்கூடிய
நோய்களை தீர்க்கக்கூடிய
நவகிரஹ தோஷங்களினால் ஏற்படும் தீமைகளை குறைத்து நன்மை தரக்கூடிய அபூர்வ ஸ்லோகம் முக்காலமும் காக்கும் மூக பஞ்சசதீ
மஹாபெரியவா பரிந்துரைத்த மூகபஞ்சசதி

இது மஹா பெரியவாளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்தோத்திரம். அம்பாளைப் பற்றிய ஸ்தோத்திர கிரந்தங்களுக்குள் மிகவும் சிறந்தது என்று புகழ்கிறார். அவர் காமகோடி கோக்ஷஸ்தானம் மூலமாக இந்த ஸ்தோத்திரத்தை புஸ்தகமாக வெளியிட்டு, பல பக்தர்களிடம், இஹ பர சௌபாக்யத்துக்காக தினமும் இதை படிக்கும்படி பரிந்துரை செய்திருக்கிறார். ஸ்தோத்திர வடிவமாக இருப்பதால், நேரம், இடம், தகுதி, பாராமல் எவரும் எவ்விடத்திலும் எந்நேரத்திலும் பக்தியோடு இதை பாராயணம் செய்யலாம். சிறு வயதில் திக்குவாய் இருந்த ஒருத்தர், மஹா பெரியவா சொல்லி மூக பஞ்ச சதீ படித்து சங்கர பாஷ்யத்துக்கு வாக்யார்த்தம் சொல்லுகிற அளவுக்குப் பெரிய பண்டிதர் ஆகி விட்டார்.

இயற்றியவர் மூகர்.
நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த மூகர், காஞ்சி காமகோடி மடத்தின் இருபதாவது பீடாதிபதி
காளிதாஸர், தண்டி, பவபூதி, வரருசி போன்ற புலவர்கள் போஜராஜனின் சபையில் நவரத்தினங்கள் என்ற புகழுடன் விளங்கிவந்தனர்.
இவர்களில் சிறந்த புலவர் யார் என்ற கேள்வி ஒருநாள் எழுந்தது.
தண்டியும், பவபூதியுமே சிறந்த கவிஞர்கள் என்று காளிதாஸனுடன் போஜராஜன் சபையில் அரூபமாக எழுந்தருளிய தேவி கூறினாள்.
அதைக் கேட்ட காளிதாஸர் தேவியிடம் ‘அப்படியானால் நான் யாரடி?’ என்று ஏகவசனத்தில் கோபத்துடன் கேட்டார்.
தேவியோ அமைதியாக ‘நீயே நான்’ என்று அவரே திகைக்கும் வண்ணம் பதிலளித்தார்.
தனக்கும் காளிதாஸருக்கும் பேதம் இல்லை. தத்வமஸி எனும் மகாவாக்கியத்தின் பிரதிநிதியாக காளிதாஸர் இருப்பதாக கூறினாள்.
ஆனால், தன்னை அவதூறாக ஏக வசனத்தில் விளித்ததால் மறுபிறவியில் ஊமையாக பிறக்குமாறு காளிதாஸருக்கு சாபம் அளித்தாள்.

காளிதாஸர் மனம் வருந்தி வேண்ட, பேச்சிழந்து பிறந்தாலும் மீண்டும் பேச்சுத்திறன் மற்றும் கவிபாடும் திறமையை அருள்வதாக வாக்களித்தாள் தேவி.
அதன்படி காஞ்சிபுரத்தில் ஒரு அந்தணக் குடும்பத்தில் பேச்சிழந்த குழந்தையாக பிறந்தார் காளிதாஸர்.
மூகர் எனும் பெயர் கொண்டார். சிறுவயதிலிருந்தே காமாட்சி அம்மன் சந்நதியிலேயே அமர்ந்திருப்பார்.
அச்சமயம் ஒரு தேவி உபாசகர் வாக்கு சித்தி வேண்டி, தேவியை வழிபட்டு வந்தார்.
காளிதாஸருக்கு தேவி திருவருள்புரியும் நேரம் வந்தது. ஒருநாள் தன்னை எண்ணி வழிபடும் உபாசகருக்கு அருள்புரிய எண்ணிய அம்பிகை உபாசகருக்கு அருகில் வந்தாள்.
அப்போது முற்பிறவியில் ச்யாமளா தண்டகம் போன்ற அற்புத துதிகளை அருளிய காளிதாஸர் அவளைப் பார்த்து தாயே என்று சொல்ல நினைத்து, பேபே என அழைக்க, அந்த சப்தம் உபாசகரின் தியானத்தைக் கலைத்தது.
உடனே விழித்த அவர், அந்த சப்தத்தை வெளிப்படுத்தியது இந்த கன்னியே காரணம் என நினைத்து ‘போ இங்கிருந்து,’ என்று தேவியை விரட்டினார்.
மணக்கும் தாம்பூலத்தைத் தரித்திருந்த தேவி அங்கிருந்து அகன்று மூகராய் பிறந்த காளிதாஸரின் வாயில் தன் தாம்பூல எச்சிலை உமிழ்ந்தாள். உடனே வாக்கும், கவிபாடும் திறமையும் பெற்றார் மூகர்.
அந்தக் கணமே பேரருவியாக ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம், கடாக்ஷ சதகம், மந்தஸ்மித சதகம் என ஐநூறு ஸ்லோகங்களால் தேவியைத் துதித்தார்.
மூகர் (பேச்சிழந்தவர்) ஐநூறு துதிகளால் துதித்ததால், இத்துதி மூகபஞ்சசதீ என பெயர் பெற்றது.
இதில் ஒவ்வொரு துதியிலும் காமாக்ஷி, காஞ்சி அல்லது காமகோடி என்ற பதம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூக பஞ்ச சதீ முழுமையையும் பாராயணம் செய்ய ஞானம் கிட்டும் என்பது மகாபெரியவர் வாக்கு.
ஆர்ய சதகம் அன்னையின் நாம மகிமைகளைச் சொல்வது. அன்னை காமாட்சியின் நாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே அவள் ஓடிவந்து நம்மைக் காப்பாள்.
சிறப்புகள் வாய்ந்த ஆர்ய சதகத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம் என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக, ஆர்ய சதகம் முழுமையையும் பாராயணம் செய்ய வாக்குவன்மை ஸித்திக்கும். ஆர்ய சதகத்தின் 'வித்யே விதாத்ரு' என்று தொடங்கும் ஒரு ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து சொல்லி வர, மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
திருமண வாழ்வில் பிரச்னை இருப்பவர்கள், ஒரு பௌர்ணமி அன்று தொடங்கி அடுத்த பௌர்ணமிக்குள் 5 முறை ஆர்ய சதகத்தை பாராயணம் செய்தால், தம்பதிகளுக்குள் மன ஒற்றுமை ஏற்பட்டு இல்லறம் இனிக்கும் என்கின்றனர் பெரியவர்கள்.
அதேபோல திருமணம் கைகூடாத வரன்கள், 'ஸ்மர மதன வரணலோலா' என்று தொடங்கும் ஆர்ய சதகத்தின் 91 வது ஸ்லோகத்தைச் சொல்லிவர விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

'பாதாரவிந்த சதகம் ' அன்னையின் திருப்பாதங்களின் எழிலையும், அவற்றின் மகிமைகளையும், அவற்றில் சரணடைவதன் மூலம் கிட்டும் நற்பயன்களையும் போற்றுகிறது.
மனக் கவலைகள் தீர்ப்பவள் காமாட்சி. பாதாரவிந்த சதகத்தின் 'கதா தூரீகர்த்தும்' என்று தொடங்கும் 22 வது ஸ்லோகத்தைப் பாராயணம் செய்துவர மனக் கவலைகள் தீரும்.
இன்று பெரும்பாலானவர்கள் நவகிரகப் பெயர்ச்சி குறித்தே கவலை கொள்கின்றனர். அன்னையின் பாதாரவிந்தங்களைச் சரணடைந்தபின் எந்த வினையும் அணுகாது. அவளின் தாமரைப் பாதங்களைச் சரணடைய சகலமும் வெற்றியாகும் என்னும் பொருள் தரும் 'ததாநோ பாஸ்வத்வாம்' என்று தொடங்கும் இந்தச் சதகத்தின் 59 வது பாடலை மனப்பாடம் செய்து தினந்தோறும் சொல்லிவர, நவகிரகங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும், நன்மைகள் கூடும் என்பது ஐதீகம்.
அதே போல நோய்கள் நீங்கி நிவாரணம் பெறவும் ஒரு ஸ்லோகம் சொல்லப்படுகிறது. மந்தஸ்மித சதகம் என்னும் அன்னையின் புன்னகைச் சிறப்பினைப் பாடும் பாடல்களில் 'இந்தானே பவ' என்று தொடங்கும் 94- வது பாடலை மனப்பாடம் செய்து பாடிவர நோய்களிலிருந்து நிவாரணம் கிட்டும் என்பது நம்பிக்கை.

show more

Share/Embed