Biofloc Advanced Water Preparation Part 1, பியோபிளாக் நுண்ணுயிர் உற்பத்தி முறை
biofloc tamilnadu Dv Farms biofloc tamilnadu Dv Farms
9.98K subscribers
27,094 views
592

 Published On May 1, 2020

Biofloc Advanced water preparation, Water preparation, fish farming#

அதிக லாபம் தரும் பியோபிளாக் முறையில் மீன் வளர்ப்பு
பியோபிளாக் மீன் வளர்ப்பு முறையென்றால் என்ன ? அதன் சிறப்பு அம்சங்கள்
நாம் மீன்களுக்கு கொடுக்கும் உணவின் மீதமும் மற்றும் மீன்களின் கழிவுகளும் நீரில் மீன்களுக்கு நச்சுத்தன்மையுள்ள அம்மோனியாவாகவும் , நைட்ரைட் மற்றும் நைட்ரேட் ஆகவும் மாறுகிறது. இந்த நச்சுத்தன்மையை நாம் நீரில் கலக்கும் மூன்று விதமான நன்மைபயக்கக்கூடிய நுண்ணுயிர்கள் உணவாக எடுத்துக்கொண்டு பியோபிளாக் என்ற துகள்களை வெளியிடுகிறது. இந்த துகள்களில் 49 சதவிகிதம் ப்ரோட்டீன் மற்றும் 11 சதவிகிதம் கார்போஹைட்ரெட் மற்றும் 5 சதவிகிதம் கொழுப்பு சத்தும் அடங்கியுள்ளது. மேலும் இதில் மீன்களுக்கு தேவையான அமிலங்களும் மற்றும் நுண்ணுட்ட சத்துக்களும் அடங்கியுள்ளது. இந்தத்துகள்கள் நீரில் 24 மணிநேரமும் மிதந்து மீன்களுக்கு உணவாக பயன்படுகின்றது. இதனால் நாம் மீன்களுக்கு கொடுக்கும் உணவின் அளவு குறைந்து , நமக்கு மீன்களை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்யமுடிகிறது. மேலும் நீரில் உள்ள மீன்களுக்கு கெடுதலான நச்சுத்தன்மையும் அகற்றுகின்றது. இதுவே பியோபிளாக் மீன் வளர்ப்பு முறையின் சிறப்பு அம்சாமாகும்
ஏன் பியோபிளாக் முறையில் மீன் வளர்க்க வேண்டும் பியோபிளாக் முறையில் மீன் வளர்ப்பின் நன்மைகள்
1) குறைந்த முதலீடு , Rs. 35000 ஒரு தொட்டி அமைக்கமுடியும் ,
2) குறைந்தவிலையில் உணவு உற்பத்தி (பியோபிளாக்)
3) அதிகப்பட்ச மகசூலாக 400 முதல் 600 கிலோ வரை 6 மாதத்தில் எடுக்கமுடியும்
4) நீர் மாசுப்படுவது குறைகின்றது
5) முதலீட்டு செய்த தொகையை முதல் அறுவடையிலையே எடுக்கமுடியும்
6) சுற்றுசூழலுக்கு மாசுபடுத்தாத மீன் வளர்ப்புமுறை
7) நம் நாட்டு தட்பவெட்பநிலைக்கு மிகவும் ஏற்றது
8) மீன் வளர்ப்பிற்கு குறைந்தஅளவு நீர் பயன்படுத்துவதால் நீர் சேமிக்கப்படுகிறது
9) எல்லாவிதமான நன்னீர் மீன்களும் வளர்க்க முடியும்
10) தண்ணீர் குறைந்த இடத்திலும் தண்ணீர் நிற்காத நில பகுதிகளில் மீன் வளர்ப்புக்கு ஏற்றமுறையாகும்
11) குறைந்தஇடத்தில் அதிக மகசூல் ஒரு தொட்டி அமைக்க 300 சதுரடி நிலம் போதுமானது
12) வீட்டின் தோட்ட பகுதிகளிலும் மற்றும் மாடியிலும் மீன்கள் வளர்க்கமுடியும். அதன்முலம் பெண்கள் வீட்டிலிருந்து வருமானம் ஈட்ட முடியும்.
13) ஒரு கிலோ மீன் உற்பத்திசெய்ய 900 கிராம் உணவு போதுமானது
14) ஓரு அறுவடை காலத்திற்கு தண்ணீர் மாற்ற தேவையில்லை , அல்லது குறைந்தளவு தண்ணீர் மாற்றினால் போதுமானது
15) ஒரு கிலோ மீன் உற்பத்தி செய்ய செலவு Rs . 53 ஆகும்.
16) பியோபிளாக் முறையில் எந்த மீன் வளர்க்கலாம்
ஏரி வௌவ்வால் , ஜிலேபி கெண்டை , சாதாக்கெண்டை , புல்கெண்டை , பனைஏறிகெண்டை , விலாங்குமீன் , பண்கசிஸ் , நாட்டு கெளுத்தி போன்ற மீன்கள் நன்றாக வளரும். இதில் ரோகு , கட்லா , மிர்கால் போன்ற மீன்களையும் அடர்த்தி குறைத்து வளர்க்க முடியும்
"பியோபிளாக் மீன்வளர்ப்பிற்கு அரசு வகை மானியம்

By : R. RAJAMANOHAAR , BIOFLOC FISH FARMER WELFARE AND DEVELOPMENT TRUST
Dv Hi-Tech Fish Farms : Copy Right Protected

show more

Share/Embed