புனித அந்தோனியாரிடம் செவ்வாய்கிழமை தோறும் சொல்லும் மூன்று மன்றாட்டு ஜெபம் | அற்புதம் அளிக்கும் ஜெபம்
Backlight Tv Backlight Tv
23.1K subscribers
1,290,004 views
10K

 Published On Aug 10, 2020

புனித அந்தோனியாரிடம் செவ்வாய்கிழமை தோறும் சொல்லும் மூன்று மன்றாட்டு ஜெபம்:
பதுவைப் பதியரான தூய அந்தோணியாரே! தூய்மை விளங்கும் லீலியே! விலைமதிக்கப்படாத மாணிக்கமே! திருஅவையில் துலங்கும் விண்மீனே வாழ்க! மகா பேறுபெற்ற தூய அந்தோணியாரே! விண்ணக வாசிகளால் தெளிந்த உண்மையான இறை வல்லுனரே ! இறை அன்பின் அக்கினியால் சுடர் விட்டு எரிகிற இறை பக்தியின் பிரகாசமே! என் முழு இருதயத்தோடு உம்மைப் போற்றித் துதித்து வாழ்த்துகிறேன். இறைவன் உமக்கு ஏராளமாகப் பொழிந்த எல்லா நன்மைகளுக்காகவும் உம்மைப் போற்றித் துதிக்கிறேன். ஓ, என் அன்புள்ள தூய அந்தோணியாரே! உமக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்க உமது திரு உருவத்திற்கு முன்பாகத் தாழ்ச்சியுடன்  முழந்தாளிட்டு நிற்கிறேன்.
இறைவனுக்கு மிகவும் பிரியமான நண்பரே! நீர் செய்திருக்கிற வாக்கை நினைத்தருளும். அடுத்தடுத்து ஒன்பது செவ்வாய்க்கிழமை உமது திரு உருவத்தைச் சந்தித்து வணங்குகிறவர்களுக்கு உமது அருளின் சக்தியைக் காட்டுவேன் என்று நீர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறீரே. இதுவரையிலும் நீர் உமது வாக்கைப் பிரமாணிக்கமாகக் காப்பாற்றி வருகிறீர். உமது உதவியை மன்றாடினவர்கள் எல்லாரும் வல்லமையுள்ள உமது பரிந்துரையால் தாங்கள் கேட்ட உதவியை அடைந்துள்ளார்கள்.
ஆகையால், நானும் என் இருதயத்தை உமக்குத் திறந்து காட்டவும், என் அவசரத் தேவைகளை உம்மிடம் முழு நம்பிக்கையுடன் சமர்ப்பிக்க இந்த ஆலயத்திற்கு வந்திருக்கிறேன். உமது திரு உருவத்தை உற்றுப் பார்க்கும் போது எனக்குக் கண்ணீர் ததும்புகின்றது. ஆயினும், என் ஆன்மா விண்ணகம் நோக்கித் தாவுகின்றது. இவ்வேளையில் நான் உம் மீது கொண்டிருக்கும் அன்பால் இரக்கத்துடன் எம் மீது உமது கடைக் கண்ணைகளைத் திருப்பியருளும். உமது கரத்தில் ஏந்திய திருக் குழந்தை இயேசுவின் மீது உமக்கு இருக்கிற அன்பைப் பார்த்து நான் கெஞ்சிக் கேட்கும் என் அவசரத் தேவைகளை எல்லாம் அத்திருப்பாலனிடம் சொல்லி, எனக்காகப் பரிந்து பேச வேண்டுகிறேன்...........
முழு ஜெபத்தை கேட்ட இந்த விடியோவை முழுவதும் பாருங்கள். அந்தோனியாரின் அற்புதத்தை பெறுங்கள்.........
--------------------------------------------------------------------------------------------------------------------------
தினமும் தியானிக்க வேண்டிய ஜெபமாலை:
ஒளி நிறை மறை உண்மைகள் (வியாழக் கிழமை):    • ஜெபமாலை | ஒளி நிறை மறை உண்மைகள் |  வி...  
மகிமை நிறை மறை உண்மைகள் (புதன், ஞாயிற்றுக்கிழமை):    • ஜெபமாலை | மகிமை நிறை மறை உண்மைகள் | ப...  
துயர் மறை உண்மைகள் (செவ்வாய், வெள்ளிகிழமை):    • ஜெபமாலை | துயர் மறை உண்மைகள் | செவ்வா...  
மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் (திங்கள், சனிக்கிழமை):    • ஜெபமாலை | மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்...  
தினமும் ஜெபமாலை ஜெபித்து அன்னையின் அருளையும் ஆசீரையும் பெறுவோம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
அன்னை வேளாங்கண்ணி மன்றாட்டு மாலை :    • அன்னை வேளாங்கண்ணி மன்றாட்டு மாலை | மன...  
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை நவநாள் ஜெபம் :    • வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை நவநா...  
-------------------------------------------------------------------------------------------------------------------------
To watch our videos in English,
   / backlightchristianmedia  
Subscribe our Channel and Click Bell icon.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
Follow Me:
Facebook :   / backlightchristiantv  
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

show more

Share/Embed