கோவிட் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தயாராக வேண்டும் | Again Covid Warning| Covid in India | Covid
Dinamalar Dinamalar
2.69M subscribers
11,331 views
73

 Published On Aug 31, 2024

#Partnership Again Covid Warning| Covid in India | Covid in USA

அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட 25 நாடுகளில் கோவிட் தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதால், உலகெங்கும் மீண்டும் கோவிட் அலை வீச வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு தகவல்படி, 85 நாடுகளில், ஜூன் 24 முதல் ஜூலை 21 வரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாம்பிள்கள் டெஸ்ட் செய்யப்பட்டன. அதில், இந்தியாவில் மட்டும் 908 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் மட்டும் இருவர் இறந்துள்ளனர்.

தற்போதைய சூழலில் இந்தியாவில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையிலும், குறிப்பிட்ட சில நாடுகளில் கோவிட் தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இது மிப்பெரிய பிரச்னைக்குரிய விஷயம் என, நொய்டாவில் உள்ள ஷிவ்நாடார் பல்கலைக்கழகத்தின் வைரஸ் நிபுணர் தீபக் சகால் கூறினார்.

கோவிட் வேரியன்ட்கள் ஒன்றோடொன்று இணைந்து புதிய வடிவெடுக்க துவங்கியுள்ளன. கோவிட் பாதிப்புக்கு ஆளானோர் இறப்பு சதவீதம் உயர்ந்துள்ளது.#AgainCovid #Warning #CovidIndia #USA

show more

Share/Embed