Guru Vishnu - 025-Tamil Grammar (தமிழ் இலக்கணம்) - Nannool - 10-The Thirty Two Methods
இலக்கணம் இலக்கணம்
3.47K subscribers
4,122 views
60

 Published On Nov 20, 2018

முப்பத்திரண்டு உத்தி -


ஓர்இரு பாயிரம் அமைந்து
மூவகை நூல்களில் ஒன்றாக
நான்கு பொருள் பயனோடு
ஏழு வகை கொள்கைகளைத் தழுவி
பத்துக் குற்றங்கள் இல்லாமல்
பத்து அழகோடு
முப்பத்திரண்டு உத்தியைக் கொண்டு
இயல் அதிகாரம் என்னும் உறுப்புகளில்
சூத்திரம் காண்டிகை விருத்தி ஆகிய
வேறுபட்ட நடைகளைப் பெறும்
என்பது
நூலின் இயல்புகள்

இவற்றுள்
(நூலின் இயல்புகளில்)
ஒன்றான

முப்பத்திரண்டு உத்திகள்
கொண்டு விளங்குவது

என்பது குறித்து

முப்பத்திரண்டு உத்தி
என்ற தலைப்பின் கீழ்
சற்று
விளக்கமாக அறிவோம்

இங்கு

உத்தி என்பது
நூலின் பொருள்
உலக வழக்கோடும்
செய்யுள் வழக்கோடும்
பொருந்த காண்பித்து
ஏற்குமிடம் அறிந்து
இவ்விடத்திற்கு
இவ்விதம் ஆகும்
என்று கருதி
தக்கபடி நடத்துவது

அது (உத்திகள்)
பல இருப்பினும்
தலைமை நோக்கி
உத்தி முப்பத்திரண்டு
என்பது நூல் வழக்கு

முப்பத்திரண்டு
உத்திகள்

01.சொல்லித் தொடங்குவது
02.இயல்களை முறைப்படி வைப்பது
03.தொகுத்துச் சொல்வது
04.விரித்துச் சொல்வது
05.முடித்துக் காட்டுவது

06.முடியும் இடம் சொல்வது
07.தான் எடுத்துச் சொல்வது
08.பிறர் கொள்கையைச் சொல்வது
09.சொல்லின் பொருளை விளக்கிச் சொல்வது
10.ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்களைச் சேர்ப்பது

11.இரு பொருள்படச் சொல்வது
12.காரணங்காட்டி முடிப்பது
13.ஒத்து வருமாயின் முடிப்பது
14.மற்றொன்றிற்கும் மாட்டிச் சொல்லி நடப்பது
15.வழக்கில் இல்லாததை நீக்குவது

16.வழக்கில் உள்ளதைத் தழுவிக்கொள்வது
17.முன்னே சொல்லி வேண்டுமிடந்தோறும் எடுத்துக்கொள்வது
18.பின்னே வைப்பது
19.வெவ்வேறாக முடிப்பது
20.முடிந்ததை முடிப்பது

21.பின்பு சொல்வோம் என்பது
22.முன்னே சொன்னோம் என்பது
23.ஒன்றைத் துணிந்தெடுத்து சொல்வது
24.எடுத்துக்காட்டுவது
25.எடுத்துக்காட்டியதில் பொருந்த வைப்பது

26.இப்படிப்பட்டது அல்ல இது எனச் சொல்வது
27.சொல்லாதனவற்றுக்கு சொல்லியவற்றால் பொருத்தச் சொல்வது
28.பிற நூலில் முடிந்த முடிவைத் தான் அங்கீகரிப்பது
29.தன்னால் குறிப்பிடும் வழக்கத்தை
மிகுதியாக எடுத்துச் சொல்வது
30.சொல்லின் முடிவிலே அதன் பொருளையும் முடிப்பது

31.ஒன்றைச் சொல்லுமிடத்து
அதற்கு இணையாக மற்றொன்றையும்
முடிப்பது
32.ஆராய்ந்து அறிய வைப்பது

நன்னூல்
சூத்திரம்-14

நுதலிப் புகுத லோத்துமுறை வைப்பே
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டன் முடிவிடங் கூறல்
தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல்
சொற்பொருள் விரித்த றொடர்ச்சொற் புணர்த்தல்
இரட்டுற மொழித லேதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தன் மாட்டெறிந் தொழுகல்
இறந்தது விலக்க லெதிரது போற்றல்
முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
விகற்பத்தின் முடித்தன் முடிந்தது முடித்தல்
உரைத்து மென்ற லுரைத்தா மென்றல்
ஒருதலை துணித லெடுத்துக் காட்டல்
எடுத்த மொழியி னெய்த வைத்தல்
இன்ன தல்ல திதுவென மொழிதல்
எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல்
பிறநூன் முடிந்தது தானுடன் படுதல்
தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல்
சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல்
ஒன்றின முடித்த றன்னின முடித்தல்
உய்த்துணர வைப்பென வுத்தியெண் ணான்கே

நுதலிப் புகுதல் ஓத்துமுறை வைப்பே
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டல் முடிவுஇடம் கூறல்
தான்எடுத்து மொழிதல் பிறன்கோள் கூறல்
சொல்பொருள் விரித்தல் தொடர்ச்சொல் புணர்த்தல்
இரண்டுஉற மொழிதல் ஏதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தல் மாட்டுஎறிந்து ஒழுகல்
இறந்தது விலக்கல் எதிரது போற்றல்
முன்மொழிந்து கோடல் பின்அது நிறுத்தல்
விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல்
உரைத்தும் என்றல் உரைத்தாம் என்றல்
ஒருதலை துணிதல் எடுத்துக் காட்டல்
எடுத்த மொழியின் எய்த வைத்தல்
இன்னது அல்ல இதுஎன மொழிதல்
எஞ்சிய சொல்லி எய்தக் கூறல்
பிறநூல் முடிந்தது தான்உடன் படுதல்
தன்குறி வழக்கம் மிகஎடுத்து உரைத்தல்
சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்
ஒன்றுஇனம் முடித்தல் தன்இனம் முடித்தல்
உய்த்தஉணர வைப்பு என உத்திஎண் நான்கே

சொல்லித் தொடங்குதல், இயல்களை
முறைப்படி வைத்தல், தொகுத்து சொல்லல்,
விரித்துச் சொல்லல், முடித்துக் காட்டல்,
முடியும் இடம் சொல்லல், தான் எடுத்து
சொல்லல், பிறர் கொள்கையைச் சொல்லல்,
சொல்லின் பொருளை விளக்கிச் சொல்லல்,
ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்களைச் சேர்த்தல், இரு பொருள்படச் சொல்லல், காரணங்காட்டி முடித்தல்,
ஒத்து வருமாயின் முடித்தல், மற்றொன்றிற்கும்
மாட்டிச் சொல்லி நடத்தல், வழக்கில்
இல்லாததை நீக்குதல், வழக்கில் உள்ளதைத்
தழுவிக்கொள்ளல், பின்னே வைத்தல்,
வெவ்வேறாக முடித்தல், முடிந்ததை
முடித்தல், பின்பு சொல்வோம் என்றல்,
முன்னே சொன்னோம் என்றல், ஒன்றைத்
துணிந்தெடுத்து சொல்லல், எடுத்துக்காட்டல்,
எடுத்துக்காட்டியதில் பொருந்த வைத்தல்,
இப்படிப்பட்டதன்று இது எனச் சொல்லல்,
சொல்லாதனவற்றுக்கு சொல்லியவற்றால்
பொருந்தச் சொல்லல், பிற நூலில் முடிந்த
முடிவைத் தான் அங்கீகரித்தல், தன்னால்
குறிப்பிடும் வழக்கத்தை மிகுதியாக எடுத்துக்
காட்டல், சொல்லின் முடிவிலே அதன்
பொருளையும் முடித்தல், ஒன்றைச் சொல்லு
மிடத்து அதற்கு இணையாக மற்றொன்றையும்
முடித்தல், ஆராய்ந்து அறிய வைத்தல் என
உத்தி முப்பத்திரண்டாம்.

நன்னூல்
சூத்திரம்-15

நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி
ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத்
தகும்வகை செலுத்துத றந்திர வுத்தி

நூல்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி
ஏற்புஉழி அறிந்துஇதற்கு இவ்வகை ஆம்எனத்
தகும்வகை செலுத்துதல் தந்திர உத்தி

நூலின் பொருள் உலக வழக்கோடும்
செய்யுள் வழக்கோடும் பொருந்த காண்பித்து
ஏற்குமிடம் அறிந்து இவ்விடத்திற்கு இவ்விதம்
ஆகும் என்று கருதி தக்கபடி நடத்துதல்
நூல் உத்தியாம்.

வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu

@TamilGrammar

குரு விஷ்ணு – தமிழ் இலக்கணம்
Guru Vishnu - Tamil Grammar / Ilakkanam


தமிழ் இலக்கணம் – முப்பத்திரண்டு உத்தி

thamizh ilakkanam - muppaththirandu uththi

Tamil Grammar / Ilakkanam – The Thirty Two Methods

#குருவிஷ்ணு
#தமிழ்அமுதம்
#ilakkanam
#guruvishnu
#tamililakkanam

show more

Share/Embed