பாதாள கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கிணற்றின் ரகசியம்!!😱
Praveen Mohan Tamil Praveen Mohan Tamil
614K subscribers
168,866 views
2.9K

 Published On Aug 19, 2023

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

Hey guys, இன்னிக்கி நாம Adalaj ன்கர ஒரு சின்ன ஊர்ல இருக்கிற ஒரு மர்மமான structureஅ தான் பார்க்க போறோம். ரோட்டுக்கும், வீடுகளுக்கும், மரங்களுக்கும் நடுவுல இது என்ன லிங்கம் shape ல ஒரு கட்டடம்? இது ஏதாவது அரசாங்கத்தோட ரகசியமான இடமா? இல்ல underground பதுங்கு குழியா? இல்ல. இது அடாலஜ் நீ வாவ் அப்படிங்கற ஒரு பழங்காலத்து ( Historic) Structure. கிட்டத்தட்ட சரியா வடக்கு தெற்கான axis ல துல்லியமா align ஆன மாதிரி இருக்கிற இதோட design ரொம்பவே uniqueஆதெரியுது. வடக்கு பக்கம் இதுக்கு வாசலே இல்ல. Structure ஓட நடுப் பகுதியில இருந்தும் உள்ள நுழையுற வழிங்க ஏதும் இல்ல. ஆனா, இந்த பக்கம் பாருங்களேன்! இதுக்கு படிக்கட்டோட மூணு திசையில ஒண்ணுக்கு பக்கத்துல ஒண்ணா மூணு வழிங்க இருக்கு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால இப்படி ஒரு uniqueஆன Structureஅ ஏன் கட்டி இருக்காங்க? மேலே இருக்கிற இந்த மூணு எண் கோண(octagonal) வடிவத்தில இருக்கிற structures என்ன? இப்ப நாம தரைல இறங்கி, பக்கத்துல போய் பார்க்க try பண்ணலாம், வாங்க!


இது ஒரு ரொம்ப ஆச்சரியமான (விசித்திரமான) structure. ஏன்னா தரை தளத்துல இருந்து பார்த்தா ஒண்ணுமே கண்ணுக்கு தெரியல. வழக்கமா நான் உங்களுக்கு, தரைத்தளத்துல (ground level ல ) இருந்து ஆரம்பிச்சு, மேல நோக்கி போற structures ஓட அமைப்புகள தான் காட்டி இருக்கேன். இதுல, நாம ground level ல இருந்து ஆரம்பிச்சு கீழ நோக்கி போகப் போறோம். ஆமா. இது ஒரு underground structure. ஆனா எவ்வளவு levels இருக்கு தெரியுமா? Underground (நிலத்தோட அடிக்கு) போறதுக்கு எத்தன மாடி (floors)இருக்குன்னு தெரியுமா? இது அஞ்சு அடுக்குக்கு கீழ போகுது. அதாவது, இதுக்கு அஞ்சு வேற வேற levels இருக்கு. இந்த Structureஅ பத்தி experts என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாமா? Experts இத அடாலஜ் படிக்கிணறு(Step well) னு சொல்றாங்க. இது பொதுமக்களுக்கு தண்ணி provide பண்றதுக்கான ரெண்டு தனித்தனி கிணறுகளோட கட்டப்பட்டிருக்குனு சொல்றாங்க.என்னது? நிறைய அடுக்குகளோடயும் சிற்பங்களோடயும் இருக்கிற இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான ஒரு structure வெறுமே தண்ணிய provide பண்றதுக்காக மட்டுமா?! எங்கேயோ உதைக்குதே?ஆனா, இத விட வினோதமா இன்னொரு பேச்சும் அடிபடுது. Wikipedia இத ஒரு Indo - Islamic கட்டட அமைப்பு(structure )ன்னு சொல்லுது. அதாவது, இந்த structure இந்துக்கள், முஸ்லிம்கள் ரெண்டு பேராலயும் சேர்ந்து கட்டப்பட்டு இருக்குன்னு சொல்லுது. இது எப்படி சாத்தியம், சொல்லுங்க?

இப்ப நாம, 75 அடி ஆழத்துக்கும் கீழ வந்துட்டோம். நாம இங்க இருக்கறதுலயே கடைசி level க்கு வந்துட்டோம். இந்த வட்டமான கிணத்தை இப்ப நம்மளால பாக்க முடியுது. இது ஒண்ணும் பாக்குறதுக்கு ஓஹோன்னு சொல்லிக்கற மாதிரி இல்ல. ரொம்பவே சிம்பிளா தான் இருக்கு. சுமார் 12 அடி diameterம் வெறும் 30 அடி அகலமும் தான் இருக்கும். எல்லா பக்கத்துல இருந்தும் ஜனங்க சுலபமா தண்ணி எடுக்க வசதியா நாலு பக்கத்துல இருந்தும் இதுக்கு படிகள் இருக்கு. இந்த பெரிய, பரந்த, அஞ்சு மாடி underground Structureஅ கட்டறதுக்கு இந்த கிணறு மட்டும் தான் ஒரு முக்கியமான நோக்கமா இருந்திருக்க முடியுமா? நீங்களே பாக்கறீங்கல்ல? இங்க வேற எதுவுமே இருக்கிற மாதிரி தெரியல. அதனால நாம திரும்பி போயி இங்க இருக்கிற மத்த விஷயங்கள பாக்கலாம் வாங்க. இல்ல, இல்ல. கொஞ்சம் இருங்க! அந்த ரெண்டாவது கிணறு என்ன ஆச்சு? நான் சொன்னேன்ல இங்க ரெண்டு கிணறு இருக்குன்னு. Right? அந்த ரெண்டாவது கிணறு எங்க இருக்கு? நாம இந்த முதல் கிணத்த தாண்டி உள்ள போயி அதை கண்டுபிடிக்க முடியுதான்னு பாப்போம் வாங்க!


முதல் கிணத்த நாம தாண்டி போனதுக்கு அப்புறம் இங்க இன்னொரு structure இருக்கு. இங்க பாருங்களேன்! இங்க ரொம்ப குறுகலான ஒரு entrance இருக்கு. இது வெறும் 2 அடி அகலம் தான் இருக்கும். ஒரே ஒருத்தர் மட்டும் தான் புகுந்து போற மாதிரி இது அவ்வளவு குறுகலா இருக்கு. அப்பாட! ஒரு வழியா நம்மளால இந்த ரெண்டாவது ரகசிய கிணத்த இப்ப பாக்க முடியுது.இது முதல்ல இருந்த கிணத்த விட சின்னதா தான் இருக்கு. ஆழமும் ரொம்ப கம்மியா தான் இருக்கு. நீங்க கிணத்துக்குள்ள நல்லா உத்து பார்த்தீங்கன்னா அதோட அடிப்பகுதிய உங்களால பாக்க முடியும். 15 அடி ஆழத்துக்கும் கம்மியா தான் இருக்கும். ஒண்ணுக்கு பக்கத்துல ஒண்ணா ரெண்டு தனித்தனி கிணறுகள யாரோ ஏன் வெட்டி(கட்டி) வச்சிருக்கணும்?அதுவும் தண்ணி குடிக்கணும்ங்கர ஒரே காரணத்துக்காக. Right? இப்ப, இன்னைக்கு நீங்க ஒரு வீடு கட்டுறீங்கன்னு வச்சுக்குங்க. நீங்க பக்கத்துல பக்கத்துல ரெண்டு தனித்தனி கிணறுகள வெட்டுவீங்களா? இல்ல, ரெண்டு தனித்தனி போர்வெல் போடுவீங்களா? இது எப்படி இருக்குன்னா, ஒரே வீட்டுக்கு முன்னால ரெண்டு தனித்தனி வாசல் இருந்தா எப்படி இருக்கும்? அப்படித்தான்! யாருமே இப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க. ஏன்னா, இப்படி வக்கிறதுனால எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனா, இத முதல்ல கட்டின ஸ்தபதிங்க இத ஒரு சரியான நோக்கத்தோட தான் கட்டி இருந்திருக்கணும். ஆனா அது என்னன்னு நம்மளால தான் சரியா புரிஞ்சுக்க முடியல. மக்களோட பார்வைக்கு மறஞ்சு இருக்கிற மாதிரி இந்த கிணத்த ஏன் வச்சிருக்காங்க? இங்க பாருங்களேன்! ரொம்ப சுவாரசியமான சிற்பம் இருக்கு! ரெண்டு மீன்கள் முத்தம் கொடுத்துட்டு இருக்கு.

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil
#hindu #hinduism #indoislamic #india #gujarat #adalaj #adalajstepwell #stepwell #history #mystery #shorts

show more

Share/Embed