Thiruneermalai திருநீர்மலை
SunderMedia SunderMedia
721 subscribers
28,288 views
213

 Published On Sep 22, 2023

‪@SunderMedia‬
வணக்கம் இபோ நாம வந்திருக்கிறது பெருமாளின் 108 திவ்வியதேசங்களில் 62வது திவ்வியதேசம் திருநீர்மலை கோயில். இந்த கோவில் எங்க இருக்குன்னா தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் திருநீர்மலை பேரூரட்சில்யில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறவழி சாலை வழியாக வரலாம். பேருந்து எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஆட்டோ வரவு அதிகமாக உள்ளது.
கோயில் மலைஅடிவாரத்தில் கோயிலுக்கெதிரே சாலையை ஒட்டியவாறு இந்த கோவிலுக்கு நீராழி மண்டபத்துடன்கூடிய அழகிய தெப்பகுளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தில் குளித்து பெருமாளை வழிப்பட்டால் நோய் விலகி நலம் உண்டாகும், சித்தம் தெளிந்து சகலபாக்கியங்களும் கிடைக்கபெறும் என கூறபடுகிறது. சாலையை கடந்துவந்தால்
இங்கு பெருமாள் நீர்வண்ணராக மலை அடிவாரத்தில் அருள் புரிகிறார். நீர்வண்ண பெருமாளை தரிசிதபினரே மலை மீது செல்லவேண்டும் என்பது முறை. மலை மீது பெருமாள் ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், பாலநரசிமராகவும் காட்சியளிக்கிறார்.
இங்கு கோயில்கள் காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் பக்தர்களுக்காக நடை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் அவர்களளால் இத்திருதலங்கள் வாழ்த்தபெற்றதாகும். இங்கு சித்திரையில் பிரம்மோத்சவம் 10 நாட்கள், வைகாசி வசந்த உற்சவம், ஆணி கோடை உற்சவம், புரட்டாசி சனி உற்சவம் கொண்டாடபடுகிறது.
பக்கதர்கள் தங்கள் வேண்டுதல் நிவேரியபின், சுவாமிக்கு திரு மெய் அஞ்சனம் செய்து ( அதாவது திருமாலின் திருமேன்க்கு நறுமண எண்ணெய் பூசுவதாகும்) புத்தாடை அணிவித்து சிறப்பு வழிபாடு செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
இப்போ நாம பார்கர்த்து மலைஅடிவாரத்தில் உள்ள நீர்வண்ண பெருமாள் கோயிலின் ராஜா கோபுரம், வாங்க கோயிலுக்குள்ள போய் பார்க்கலாம். ராஜகோபுரம் கடந்து சென்றால் நேரே கல்தூண் மண்டபம், வலதுபக்கம் நீர்வன்னபெருமால் கோயில் உள்ளது, நீர்வன்னபெருமால் கோயில் நுழைவுவாயில் தெற்கு நோக்கி அமைத்துள்ளது.
நுழைவுவாயில் கடத்து சென்றால் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் நீர்வன்னபெருமால் காட்சி அளிக்கிறார். உள்மண்டபத்தில் ஆழ்வார்கள் சிலைகள் பெருமாளை பார்தபடி அமைக்கப்பட்டுள்ளது. உர்ச்சவர்சிலைகள் தெர்க்குபார்தபடி உள்ளது.
கொடிமரம் மற்றும் பலிபீடம் நீர்வண்ண பெருமாளுக்கு நேராக அமைத்துள்ளது. ராஜகோபுர நுழைவுவாயில் வலது பக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
நீர்வண்ண பெருமாள் கோவில் வெளிப்புறதில் அமைத்துள்ள மற்ற சன்னதிகள்.
கல்தூண் மண்டபத்தில் அணிமாமலர்மங்கை தாயார் சன்னதி,
ராமன்,சீதை, லட்சுமணன் சன்னதி, சுற்றிவரும் பாதையில் ஆண்டாள் தாயார் சன்னதி .. சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை அமைத்துள்ளன
தல வரலாறு.
இத்தலத்து பெருமாளை தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்திருந்தபோது மலையை சுற்றி நீர் நிறைந்த்திருந்த்தது. அவரால் நீரை கடந்து பெருமாளை தரிசிக்கமுடியவில்லை, இதனால் அவர் காத்திருந்து பெருமாளை தரிசித்துவிட்டு செல்ல முடிவெடுத்து எதிரே இருந்த மலையில் தங்கிஇருந்தார். நாட்கள் ஓடின தண்ணீர் குறையவில்லை, தரிசித்துசெல்வதென இருந்த திருமங்கையாழ்வார் நீர்வற்றியபின் பெருமாளை தரிசிக்க சென்றார். தன மீது பக்தியும் பாசமும் கொண்ட பக்தனுக்காக நின்ற கோலத்தில் நீர்வன்னராக காட்சிகொடுதார். நீர் சூழந்த மலையின் மத்தியில் அருளியதால் இவருக்கு நீர்வண்ண பெருமாள் என்ற பெயரும் இத்தலத்துக்கு திருநீர்மலை என்ற பெயரும் வந்தது.
கிழே பெருமாளை நீர்வன்னராக தரிசிதபின்னர் ராஜகோபுரத்தை கடந்து இடதுபக்கம் திரும்பிபார்த்தால் கல்தூன்மண்டபம் பார்க்கலாம் அதற்க்கு நேரே மலைஉச்சி செல்லும் படிகள் அமைத்துள்ளது, வாங்க மலைஉச்சிக்கு போகலாம்.
படி எரிசெல்லும் போது சிறிது தூரத்தில் வலதுபக்கம் ஆஞ்சநேர்யர் சன்னதி அமைத்துள்ளது. அவரை வணகியபின் மீண்டும் படி எரிசெல்ல மலை உச்சியில் கோபுரத்தை காணலாம், நுழைவுவாயிலை கடந்து சென்றால் கொடிமரம் மற்றும் பலிபீடம் அமைத்துள்ளது. அதற்க்கு நேரே அமைத்துள்ளது பெருமாளின் மூன்று நிலை கொண்ட கோவில். கொடிமரம் பக்கவாட்டில் உள்ள படிகள் எரிசென்று வாயிலில் நின்றாலே பெருமாள் ரங்கநாதர் படுத்த கோலத்தில் அருள்புரிவதை காணலாம் மீண்டும் மண்டபதின் உள்படிகள் ஏறி சென்று உள்ளரகில் படுத்த கோலத்தில் ரங்கநாதரை அருகமாயில் காணலாம். அவருக்கு அருகில் பிருகு முனிவர் மற்றும் மார்கண்டேய மகரிஷியை காணலாம்.
தனி சன்னதியில் திரு ரங்கநாயகி தாயார் அருள்பாலிக்கிறாள், மீண்டு பக்கவாட்டில் உள்ள படிகள் ஏறி சென்றால் உலகளந்த பெருமாள் சன்னதி பாலநரசிம்ம சன்னதி காணலாம். இவர்களையும் வணகியபின் வெளிவரும்போது மனம் அமைதியுடனும் புத்துணர்ச்சியுடனும் இருப்பதை நாம் உணர்வோம்.
பிருகு முனிவரும், மார்கண்டேய மகரிஷியும் ஸ்ரீரங்கத்தில் பெருமாளை படுத்த கோலத்தில் தரிசித்துவிட்டு இவ்வழியே சென்றனர். பெருமாளின் தரிசனம் அவர்கள் கண்களை விட்டு விலகவில்லை. மீண்டும் அக்கட்சியை காண விழைந்தனர். இருவரும் பெருமாளை நோக்கி உருக்கமாக வேண்டிக்கொள்ள பெருமாள் படுத்த கோலத்தில் ரங்கநாதராக இம்மலைமீது காட்சி அளித்தார். படுத்த கோலத்தை போக கோலமாக அழைகிறார்கள். மலை மீது மூர்த்தியாகவும் விளங்குகிறார். ரங்கநாதருக்கு அபிஷேகம் கிடையாது. வருடத்திற்கு ஒருமுறை கார்த்திகை மாதம் தையல காப்பு மட்டுமே செய்யபடுகிறது.
மலை உச்சியில் இருந்து மலை கீழே உள்ள கோயில் மற்றும் குளதின் காட்சி அற்புதம்.
வந்த படியே நாம் மீமீண்டும் மலைமீதிருந்து இறங்க வேண்டும்.
பிறந்த ஒவ்வொருவரும் இத்திருநீர்மலை பெருமாளை வந்து வாங்கினால் நம் முன்ஜென்மது பாவங்கள் விலகும், திருமண யோகம் விரைவில் கிடைக்கப்பெரும் , கல்யாணத் தடைகள் மொத்தமும் விலகும் என்கிறார்கள் பெருமக்கள்.

நீங்களும் வாங்க தாயார் மற்றும் பெருமாள் அருள் உங்களுக்கும் கிடைக்கட்டும். நன்றி வாழ்க வளர்க.

show more

Share/Embed