சேர்ந்து சேவிப்போம் திருவாய்மொழி 7.4 - நம்மாழ்வார்
Bashyam Narayanan Bashyam Narayanan
3.23K subscribers
30,013 views
324

 Published On May 26, 2021

ஆழி எழ​ சங்கும் வில்லும் எழ​ - எம்பெருமானது வெற்றிகளைப் பேசுதல் பாசுரங்களின் பதவுரைகளை இணைப்பில் காணலாம்.

ஆழி எழ சங்கும் வில்லும் எழ * திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ * அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ * அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே

ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி * அரவு
ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி * கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி * அப்பன்
சாறுபட அமுதம் கொண்ட நான்றே

நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே * பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே * பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே * அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே

நாளும் எழ நிலம் நீரும் எழ * விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ * மலை
தாளும் எழ சுடர் தானும் எழ
அப்பன் ஊளி எழ உலகம் உண்ட ஊணே

ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி * மன்னர்
ஆண் உடைச் சேனை நடுங்கும் ஒலி * விண்ணுள்
ஏண் உடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி * அப்பன்
காணுடைப் பாரதம் கை அறை போழ்தே

போழ்து மெலிந்த புன் செக்கரில் * வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா * மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் * அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே

மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் * இன
நூறு பிணம் மலைபோல் புரள * கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா * அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே

நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் * பின்னும்
நேர்சரிந்தான் எரியும் அனலோன் * பின்னும்
நேர்சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் * அப்பன்
நேர்சரி வாணன் திண்தோள் கொண்ட அன்றே

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டு பிறவும் * பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் * அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே

மேய் நிரை கீழ் புக மா புரள * சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய * இன
ஆநிரைபாடி அங்கே ஒடுங்க * அப்பன்
தீ மழை காத்து குன்றம் எடுத்தானே

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரைசெயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே

show more

Share/Embed