நறுமணம் வீசும் தசாங்க கோன்/பின்நோக்கி புகை பாயும் தூபகோன்/Backflow Incense Cones
DIY with KALAI DIY with KALAI
4.36K subscribers
144 views
10

 Published On Feb 5, 2022

வீட்டில் நாள்தோறும் விளக்கேற்றி, ஊதுபத்தி ஏற்றி, தூபம் போடும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. பண்டைய காலம் தொட்டு இப்பழக்கம் உள்ளது.
நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு முக்கிய காரணம் இருக்கும் என்பதை நாம் உணர்ந்திருகின்றோம். அதன்படி தூபம் போடுவது என்பது வீட்டில் வெறும் வாசனைக்காக மட்டும் இல்லை. அதன் பின்னர் பல நன்மைகள் அடங்கியுள்ளன.

சாம்பிராணி தூபம், தசாங்கம் தூபம் என பல இதில் உள்ளன. தசாங்கம் என்பது கோயில்கள், சில வீடுகளில் பயன்படுத்தப்படும் 10 வகை மூலிகை, வாசனை திரவியங்களைச் சேர்த்தது.

இந்த தசாங்கத்தின் புகை உடலின் பல்வேறு உள் உறுப்புகளின் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதன் நறுமணமே தெய்வீக உணர்வை உண்டாக்குதாகும். எதிர்மறை சக்திகள் நம்மை விட்டு விலகும். இதன் புகையை நுகர்வதால் நம் உடலும், மனமும் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு அடைந்துவிடும். இதற்கு அந்த அளவுக்கு மகத்துவம் வாய்ந்த சக்தி இருக்கிறது. கோவில்களில் இருக்கும் நறுமணம் போல் நமது வீட்டிலும் மணம் நிறைந்து இருக்கும்.
இந்த தசாங்கத்தை பயன்படுத்தி, நாமே குறைந்த செலவில் வாசனை தூப கோன்களை தயார் செய்யலாம். இவை புகையை கீழ்வழியாக வெளியேற்றுவது பார்க்கவே அழகாக, மகிழ்ச்சியாக இருக்கும்.

இத்தகைய கோன்களை (Backflow Incense Cones) செய்வது எப்படி என இந்த வீடியோவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. முழுமையாக பார்த்து பயனுள்ளதாக இருந்தால் ஒரு LIKE கொடுத்து என்னை உற்சாகப்படுத்துங்கள். பிறரும் பயன்பெற உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு இந்த வீடியோவின் லிங்கை அனுப்புங்கள், மறக்காமல் DIY with KALAI சாலனை SUBSCRIBE செய்யுங்கள்.

---------------------------

Smoke Backflow Incense Fountain / Burner
பின்நோக்கி பாயும் புகை ஊற்று செய்முறை வீடியோ லிங்க் :    • Smoke Backflow Incense Burner/பின்னோக...  

--------------------


Used background music details:

Music taken from YouTube free music
Music Name : Smoke - Silent Partner
Music link :    / @kamalanathankalaimani5700  

show more

Share/Embed