தமிழகத்தின் தனித்தீவுக்கு ஒரு பயணம்| Thengumarahada bus ride| தெங்குமரஹாடா |Nilgris Island | Buscafe
Bus Cafe✌️ Bus Cafe✌️
72.3K subscribers
26,816 views
363

 Published On Nov 12, 2022

TnStC Bus on Off Road😍

Full Adventure And danegerous Road..


🚫Entry Restricted Area❌

அரசு போக்குவரத்து கழகம் கோவை✌🏻

உதகை மண்டலம்🤍

கோத்தகிரி சோலூர்மட்டம் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்தும் தெங்குமரஹாடா விற்கு இரு பேருந்துகள் இயக்கப்படுகிறது..

மேட்டுப்பாளயத்தில் புறப்படும் நேரம் : காலை : 10 மற்றும் மாலை : 4 மணி

தெங்குமரஹாடாவில் புறப்படும் நேரம் : காலை : 7 மற்றும் மதியம் : 1.15

வழி : சிறுமுகை , பவானிசாகர்...

இந்த ஊர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்திற்க்கு சேர்ந்தது.. ஆனால் இந்த ஊருக்குள் நுழைய மூன்று மாவட்டங்களின் வழியாக பயணிக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி கோவை & ஈரோடு மாவட்டத்தில் நுழைந்து மறுபடியும் நீலகிரி மாவட்டத்தை அடைகிறது.. ஆற்றை கடந்தால் மட்டுமே ஊருக்குள் நுழைய முடியும்.


இங்கு வெளியூர் ஆட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது...

மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தி செல்லும் வழியில் பவானிசாகர் வரை சென்று அங்கிருந்து கீழ்பவானி ( பவானிசாகர் அணை ) -யை கடந்து 4km தொலைவில் உள்ள காராச்சிகொரை வன சோதனை சாவடியில் சோதனை முடிந்தவுடன் பேருந்து புறப்படும்.. தெங்குமரஹாடவிற்க்கு எளிதில் செல்ல அனுமதி கொடுக்கமாட்டார்கள்..பேருந்தில் சென்றால் கூட உள்ளூரை சேர்ந்த மக்கள் உடன் சென்றால் மட்டுமே அனுமதிப்பார்கள்..இல்லையென்றால் அங்கேயே இறக்கிவிடப்படுவார்கள்..அங்கிருந்து 1km தூரம் வரை மட்டுமே தார்சாலை இருக்கும் .செல்லும் வழியில் பவானிசாகர் அணையின் முழு தோற்றத்தையும் காண இயலும்..1km தாண்டியதும் 23km கரடுமுரடான மண் சாலைகளின் வழியே அடர்ந்த வனப்பகுதியில் பேருந்து மெதுவாக ஊர்ந்து செல்லும்...போகும் வழியில் ஏராளமான வன விலங்குகளை காண இயலும்...இது போக 3 இடங்களில் ஆபத்தான ஆற்றை கடந்து செல்லும்..மான்,யானை,சிறுத்தை, புலி,செந்நாய்கள்,காட்டெருமை மற்றும் பல வனவிலங்குகள் அப்பகுதியில் வசிப்பதால் வெளியூர் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது..பேருந்து கல்லாம்பாளையம் ( மயாற்றின் கரை ) வரை மட்டும் செல்லும்.அங்கிருந்து பரிசலில் மாயாறை கடந்து 2km சென்றால் தான் அந்த கிராமத்திற்கு செல்ல முடியும்.

#tnstc #bus #forest #jungle #nilgris


Thanks to : Roadstars💙

show more

Share/Embed