பைரவனே -பயம் தீர்க்கும் பைரவர் பாடல்
SRI DHARMALINGA SWAMIGAL SRI DHARMALINGA SWAMIGAL
1.05K subscribers
549 views
39

 Published On May 13, 2021

கொரோன போன்ற வியாதிகள் வருமோ என்ற பயம்,
தொழில், உத்தியோகத்தில் பல்வேறு கவலைகள் இருக்கும். பயம் கலந்த மனநிலையில் இருப்பவர்கள், தைரியம் உண்டாகவும், தொழிலில் முன்னேற்றம் உண்டாக கால பைரவர் வழிபாடு செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
குறிப்பாக காலபைரவரை தினசரி மாலை பொழுது சாயும் நேரம் மற்றும் குறிப்பாக தேய்ப்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
பலரும் தங்களின் குடும்ப, தொழில், வியாபாரம், உத்தியோக நிலையை நினைத்தும்,வியாதிகளாலும்,சில நேரம் மரண பயத்தாலும் மிக கவலையில் இருப்பதுண்டு. எப்படி நம் வாழ்க்கை அமையுமோ, பொருளாதார நிலை உயருமோ,எதிரிகளால்,கிரக நிலைகளால் பாதிப்பு வருமோ என்ற மிக பயம் கலந்த மன நிலையோடு பலரும் புலம்பிக்கொண்டிருப்பர்.
பயத்தை போக்கக்கூடிய, தைரியத்தைக் கொண்டுவரக்கூடிய, தொழிலில் முன்னேற்றம் தரக்கூடிய கால பைரவர் வழிபாடு எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

சிவ சொரூபமாக, ருத்ரமூர்த்தியாக இருக்கும் கால பைரவரை வணங்குவதன் மூலம் எல்லா காரியத்திலும் வெற்றி கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.காலத்தினால் கிரகநிலை கோளாறுகளால் வருகின்ற பிரச்சினைகளைக் கூட போக்கக்கூடியவர் கால பைரவர்.
பௌர்ணமியிலிருந்து ஆரம்பித்து 8 நாட்கள் அல்லது அஷ்டமியிலிருந்து ஆரம்பித்து எட்டு நாள் தொடர்ந்து சிவாலயம் சென்று, 8 தீபங்கள் ஏற்றி, சுவாமிக்கு உண்டான வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து, காலபைரவர் முன் நின்று கண்களை மூடி ‘ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய,வடுகாய ஆபத்துதாரனாய நமஹ’ என 108 முறை ஜெபித்து வழிபட வேண்டும். பூஜை முடித்து அதன் பின்னர் ஆலயத்தை 3 முறை பிரதக்‌ஷனம் செய்து காலபைரவரை வணங்கி வீட்டுக்கு வர வேண்டும்.அல்லது வீட்டில் கால பைரவர் படம் அல்லது எந்திரம் அல்லது மூலிகை பிரதிஷ்டை செய்து வழிபடலாம்
.For Details
www.kagapujandar.com.
whatsup +919786012345

show more

Share/Embed