திருக்குறள் அதிகாரம் 99 சான்றாண்மை | Thirukkural Saandraanmai Adhikaram 99 | Wishvas World Wide
Wishvas World Wide Wishvas World Wide
1.95K subscribers
742 views
11

 Published On Premiered Sep 30, 2022

981. கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

982. குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

983. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.

984. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

986. சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.

987. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

988. இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின்.

989. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

990. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.

Voice Over : Panchamar Media

#Thirukkural #tamil #திருக்குறள் #சான்றாண்மை #tamilnadu #திருவள்ளுவர் #Kural #thirukural #Thiruvalluvar #learning #learn #Saandraanmai #Adhikaram #student #education #educate #school
#smartlearning #Wishvasworldwide

show more

Share/Embed