திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் | திருமந்திரம் விளக்கம் | பகுதி 2 - பாடல் 6 - 10 வரை
Aalayam Selveer Aalayam Selveer
1.57M subscribers
70,155 views
1.6K

 Published On Mar 20, 2020

Thirumoolar Thirumanthiram Songs - Thirumoolar Thirumanthiram Padal - Thirumanthiram Explained in Tamil

திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் | திருமந்திரம் விளக்கம் | பகுதி 2 - பாடல் 6 - 10 வரை.

திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் - திருமூலர் திருமந்திரம் - திருமந்திரம் விளக்கம் - திருமந்திரம் பாடல் வரிகள்.

பாடல் #6: பாயிரம்

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரும் ஆமே.

பாடல் #7: பாயிரம்

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.

பாடல் #8 பாயிரம்

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே.

பாடல் #9 பாயிரம்

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதரா னார்களே.

பாடல் #10: பாயிரம்

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் முன்னொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்ட கிலானே.

#aalayamselveer #திருமந்திரம்

show more

Share/Embed