Valaikkappu Paadal வளைகாப்பு பாடல் சீமந்தம் பாடல் Lyrics Displayed in the Description
Sundari Sathappan Sundari Sathappan
34K subscribers
2,445,829 views
29K

 Published On Oct 30, 2017

ஹரி ஓம்
வளைகாப்பு பாடல் சீமந்தம் பாடல்
**********************************

நாள் தள்ளி போனதென்று நாணமுடன்சொல்ல
நாடி பார்த்து மருத்துவச்சி நல்லசெய்தி சொன்னாள்
மூன்று மாதம் முடியும் வரை மசக்கையில் நாலே
அவள் முன்னும் பின்னும் ஓடி ஓடி வாந்தி எடுத்தாள்
நாலு அஞ்சு ஆறு ஏழு மாதம் முடிந்ததும்
அவள் மசக்கை தெளிந்து வயிறும் தெரிந்து நடையும் தளர்ந்தனள்
மேலும் கீழும் மூச்சு வாங்கி மெல்ல நடந்தனள்
முட்டி உதைக்கும் பிள்ளைதனை வயிற்றில் சுமந்தனள்....

ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ
நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ

சொந்தமெல்லாம் ஒன்று கூடி நல்ல நாள் பார்த்து
நலங்கு வைத்து வளையல் பூட்டி பூச்சூடல் செய்தார்
பச்சைவளை பவளவளை முத்து வளையல்
மஞ்சளுடன் நீலவளை பட்டு வளையல்
கருப்புவளை சிவப்புவளை கங்கணங்களும்
தங்கவளை கல் பதித்த வைர வளைகளும்.....

ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ
நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ

மல்லி முல்லை ஈருவாச்சி சாதி சம்பங்கி
மரிக்கொழுந்தும் ரோசாவும் சென்பகப் பூவும்
சரச்சரமாய் கோர்த்து தலையில் சூட்டி விட்டனர்
காப்பும் கொலுசும் கைநிறைய அடுக்கி மகிழ்ந்தனர்
கையை தட்டி கும்மி கொட்டி பாட்டுக்கள் பாடி
ஏற்றி இறக்கி ஆலம் சுற்றி திச்டி கழித்த பின்
என்ன வேனும் ஏது வேனும் எனது கண்மணி
இக்கணமே செய்து தருவோம் உனக்கு சொல்லடி என்றார்....

ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ
நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ

அப்பமுடன் கொழுக்கட்டையும் சீடையும் வேண்டும்
என் அடி நாக்கு திரிக்க ஒரு அதிரசமும் வேண்டும்
சிறுதானியத்துடன் செய்த இட்லி பொங்கலும் வேண்டும்
என் ஆயாசம் திண்திடவே பாயாசம் வேண்டும்...

ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ
நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ

நான் கேட்டதெல்லாம் வாங்கி தர தகப்பனார் வேண்டும்
நான் சொன்னதெல்லாம் செய்து தர தாயாரும் வேண்டும்
ஓடி ஓடி வேலை செய்ய உடன் பிறந்தோரும்
பாசத்துடன் பக்கத்திலே பாட்டி தாத்தாவும்
அத்தை சித்தி மாமன் மாமி அனைத்து சொந்தமும்
அன்புடனே என்னை சுற்றி இருந்திட வேண்டும்....

ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ
நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ

இத்தனையும் ஆன பின்னே பத்தாம் மாதத்தில்
நான் முத்து போல பிள்ளைதனை பெற்று தருவனே
ஊரை கூட்டி பெயரை சூட்டி தொட்டில் போடனும்
என் மாமனாரும் மாமியாரும் பார்த்து மகிழனும்
கணமும் என்னை பிரிந்திடாமல் கணவனும் என்னை
கண்ணுக்குள்ளே மணியை போல காத்திட வேணும்...

ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ
நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ
மிக ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராராரோ....ஓஓ
ஆரி ராராரோ..... ஓஓஓ ஆரி ராராரோ....ஓஓஓ

show more

Share/Embed