Sri Inmaiyil Nanmai Tharuvar Temple - Madurai
Temo Namo Temo Namo
411 subscribers
581 views
8

 Published On Nov 29, 2023

ஸ்ரீ இம்மையிலும் நன்மை தருவார் கோயில் - மதுரை
Sri Inmaiyil Nanmai Tharuvar Temple - Madurai

பெயர்க் காரணம்

இப்பிறப்பில் செய்த பாவங்களை இப்பிறப்பிலேயே மன்னித்து நன்மை தருவதால், இக்கோயில் மூலவர் சொக்கநாதரை இம்மையிலும் நன்மை தருவார் என்று அழைக்கப்படுகிறார்.

இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை நகரின் மையப் பகுதியில், தெற்கு மாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த நிலையில் அமைந்த லிங்கத்திற்கு கீழ்புறத்தில் சிவனும் பார்வதியும் இலிங்கத்திற்கு பூஜை செய்யுமாறு மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றனர். இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கப்படுகிறது. இக்கோவிலின் மூலவர் பெயர் சொக்கநாதர். அம்பாள் பெயர் மத்தியபுரி நாயகி. உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தர் ஆவார். தல விருட்சம் வில்வம் மரம் ஆகும். இக்கோயில் மேற்கு திக்கு நோக்கி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையை ஆண்ட மீனாட்சியை சிவபெருமான் மணந்து கொண்டார். பின் இத்தலத்தில் ஒரு லிங்கத்தை பிரதிட்டை செய்து, பூஜித்த பின்பே மதுரையின் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இத்தலத்தில் ஜுரத்தைக் நீக்கும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் காட்சி அளிக்கும் சன்னதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் விசாலாட்சியுடன் வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார். இக்கோயில் சண்டிகேஸ்வரை சிவனிடம் பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். பைரவர் சன்னதி புகழ்பெற்றது. இங்கு அம்பாள் சன்னதி பீடத்தில் கல்லால் ஆன ஸ்ரீசக்கரம் அமைந்துள்ளது.

திருமணமாகாதவர்கள் இக்கோயில் அம்மனை வேண்டினால் நல்ல வரன் அமையும் என்பதால் அம்மனுக்கு "மாங்கல்ய வரபிரசாதினி' என்ற பெயருமுண்டு.

மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பூமித் தலமென்பதால், புது கட்டடம் கட்டத் துவங்குபவர்கள் பிடி மண்ணை எடுத்து வந்து வழிபட்டு, அம்மண்ணைக் கொண்டு கட்டிடத்தை எழுப்புகிறார்கள்.

சிவபெருமானே மதுரையின் அரசராக பொறுப்பேற்கும் முன் இங்கு லிங்க பூஜை செய்ததால், பொறுப்பான பதவி ஏற்கும் முன்பும் சிவனுக்கு, "ராஜ உபச்சார அர்ச்சனை' செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில்    • Thiruvappudaiyar Temple - Sellur, Mad...   'நீர் ஸ்தலம்',சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',இம்மையில் நன்மை தருவார் கோயில்    • Sri Inmaiyil Nanmai Tharuvar Temple -...   'நில ஸ்தலம்',தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில்    • Sri Muktheeswarar Temple - Madurai   'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்.

show more

Share/Embed